- பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: நாடளாவிய ரீதியில் பல்வேறு பட்ட சமூகப் பணிகளை மேற்கொண்டு வரும் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனினால் இலங்கையின் நாலா பாகங்களிலும் பதிவு செய்யப்பட்ட பள்ளிவாயல்களில் தற்போது இமாம்களாக மற்றும் முஅத்தின்களாக கடமையாற்றும் 55வயதிற்கு மேற்பட்ட இதுவரை புனித உம்ரா ,ஹஜ் கடமையினை மேற்கொள்ளாத இறை இல்லங்களின் இறை பணியாளர்களுக்கு இலவசமாக புனித உம்றா கடடைமைய நிறைவேற்றுவதற்கான முழுமையான அனுசரணையை வழங்க ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் முன்வந்துள்ளதாக ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் தலைவரும்,புனர்வாழ்வு மற்றும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடியில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று 27 சனிக்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இவ் இலவச உம்றா திட்டத்தில் முதற்கட்டமாக நாடளாவிய ரீதியில் முதற்கட்டமாக 100 இமாம்கள் மற்றும் முஅத்தின்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும்,எதிர்வரும் காலங்களில் மொத்தமாக 500 பேர் இலவச உம்றா திட்டத்தில் குறைந்த பட்சம் ஒரு ஊரில் ஒருவராவது அல்லது கிராமங்களிலுள்ள பள்ளிவாயல்களிலாவது கடமையாற்றும் இமாம்கள்,முஅத்தின்கள் உள்ளவாங்கப்படுவார்கள் எனவும் கூறினார்.
அத்தோடு இற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையினை ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் மேற்கொண்டு வருவதோடு நாடளாவிய ரீதியில் பெறப்படவுள்ள விண்ணப்பப் படிவங்களை இந்த உம்ரா வாய்ப்புக்கு மிகவும் தகுதியான இமாம்கள் மற்றும் முஅத்தின்களை தெரிவு செய்ய ஐவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன்,இக் குழுவினால் எதிர்வரும் நாட்களில் பத்திரிகை மற்றும் இணையம்,வானொலி ஆகிய ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் மூலம் குறித்த திட்டத்திளை அறிமுகப்படுத்தி விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு பொருத்தமானவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
நாடாளாவிய ரீதியில் இருந்து தெரிவு செய்யப்படும் 500 இமாம்கள் மற்றும் முஅத்தின்களை ஏதிர்வரும் மூன்று மாத காலம் அல்லது ரமழானுக்கு முன்னதாக புனித உம்ரா கடமையை இலவசமாக நிறைவேற்றுவதற்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை சவூதி அரேபியா நாட்டிலுள்ள தனவந்தர்கள் மற்றும் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனுக்கு நன்கொடை வழங்கும் நன்கொடையாளர்கள் ஆகியோருக்கிடையில் உடன்படிக்கைகளை செய்திருக்கின்றோம்.
இத் திட்டத்திற்கு தகமைகளாக 55வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்,ஏதாவது ஒரு பள்ளிவாயலில் முஅத்தினாக,இமாமாக தற்போது கடமை புரிந்து இருக்க வேண்டும்,இதுவரை புனித மக்காவுக்கு உம்ராவுக்காக ,ஹஜ் கடமைக்காக இதுவரை பயணிக்காத ஒருவராக இருக்க வேண்டும் இந்த மூன்று அடிப்படை நிபந்தனைகளை அடிப்படையாக வைத்திருக்கின்றோம்.அத்தோடு முஅத்தின்கள்,இமாம்கள் கடமையாற்றும் பள்ளிவயால் நிருவாகம் இவர்களை எமது விண்ணப்பப்படிவத்தில் உறுதிப்படுத்த வேண்டும்.
குறித்த இலவச உம்ரா திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் இன்று 27 திகதி தொடக்கம் கோரப்பட்டுவதுடன் எதிர்வரும் மார்ச் மாதம் 06-03-2016 திகதி வரை விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு மார்ச் மாதம் 10-03-2016,11-03-2016 ஆகிய திகதிகளில் நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டு அதில் தெரிவு செய்யப்படுகின்ற 100 பேருக்கு முதற்கட்டமாக எதிர்வரும் 22-03-2016 திகதி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக கடவுச் சீட்டு,டிக்கட் உள்ளிட்ட ஆவணங்கள் வைளிக்கப்பட்டு எதிர்வரும் 25-03-2016 திகதி இலங்கையில் இருந்து புனித உம்ரா கடமைக்காக புறப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தகுதி அடையாளம் காணப்பட்டவுடன் ஹிறா பவுண்டேஷன் நிதியிலிருந்து கடவுச்சீட்டு (பாஸ் போட்) எடுத்துக்கொடுக்கப்பட்டு அவர்களுக்கான போக்குவரத்து செலவும் ,மேலதிகமாக அங்கு செலவு செய்வதற்கான நிதி என்பன கொடுக்கப்பட்டு உம்ரா குழுவோடு இணைக்கப்பட்டு நூறு வீதம் அவர்களின் அனைத்து செலவுகளும் எமது பவுண்டேஷனினால் பொறுப்பேற்;கப்படும்.
விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப படிவங்களை வட்செப்,ஈமெயில்,பெக்ஸ்,அல்லது தபால் ஊடாக அனுப்பி வைக்க முடியும் எனவும் இத் திட்டம் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0652055344 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷன் நிறுவனத்தின் செயலாளர் நாயம் அஷ்ஷெயக் ஏ.எல்.எம்.மும்தாஸ் (மதனி), மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் நிருவாகப் பணிப்பாளர் அமீர்,முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைகளத்தின் கிழக்கு மாகாணப் பொறுப்பாளர் அஷ்ஷெய் ஜூனைட் நளீமி,காத்தான்குடி அல் மனார் நிறுவனத்தின் பணிப்பாளர் முபாறக்,காத்தான்குடி முதலாம் குறிச்சி பெரிய மீரா ஜூம்மா பள்ளிவாயல் தலைவர் சுபைர் உட்பட ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.