Category: Your Kattankudy
-
எமது வெற்றியே 13வது திருத்தச் சட்டத்தைப் பாதுகாத்து மேலும் வளர்த்தெடுக்க உதவும்! – ஈ.பி.டி.பி
பழுளுல்லாஹ் பர்ஹான் வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் தமது ஆணையை வழங்கி, அரசியல் அதிகாரங்களை எம்மிடம் ஒப்படைக்கும் போது மட்டுமே 13வது திருத்தச் சட்டத்தை பாதுகாத்து, அதை மேலும் வளர்த்தெடுத்து எமது மக்களின் அரசியல் இலக்கு நோக்கி செல்லும் இலட்சியக்கனவுகள் சாத்தியமாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா
-
பாதுகாப்புச் செயலாளர் கோட்டாவின் இப்தார் கொழும்பு ரமடா ஹோட்டலில்
பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு வியாழக்கிழமை மாலை கொழும்பு ரமடா ஹோட்டலில் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது.
-
மட்டு-மாமாங்கத்தில் – மாமாங்க மழையகம் எனும் பெயரில் விளையாடலாம் சிந்திக்கலாம் வாங்க எனும் சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வு முகாம்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ,அங்கவீனமுற்ற ,இடம்பெயர்ந்த பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான சிறுவர்களின் சமூக பொருளாதார சூழலை மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. அமைப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவுடன் இனைந்து சேவ்த சில்ரன் சிறுவர்
-
மருதமுனை பிரதேச இறைச்சிக்கடை உரிமையாளர்களுடனான சந்திப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் மருதமுனை: ஆசிய மன்றத்தின் அனுசரனையில் கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் மருதமுனை பிரதேச இறைச்சிக்கடை உரிமையாளர்களுடனான சந்திப்பும் இப்தார் நிகழ்வும் இன்று (01.08.2013) மருதமுனை மஸ்ஜிதுல் கபீர் ஜூம்ஆ பள்ளிவாசலில் மாநகர முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்றது.
-
முன்னாள் முதல்வரின் முயற்சியால் கிரான் குளத்தில் விஞ்ஞான ஆய்வுகூடம் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் முயற்சியின் பயனால் இன்று மட்டக்களப்பு கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றது.
-
செப்டெம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை தேர்தல்!
கொழும்பு: இலங்கையில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கின்றார். மத்திய மாகாண சபை,வடமேல் மாகாண (வயம்ப) சபை மற்றும் வடமாகாண சபை ஆகியவற்றுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் முதலாம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்ததையடுத்து, இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது.
-
புதிய இராணுவ தளபதி இன்று பதவியேற்பு!
கொழும்பு: இலங்கை இராணுவத்தின் 20ஆவது புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று பதவியேற்கவுள்ளார்.இராணுவத் தளபதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்கவுக்கு லெப்டினன்ட் ஜெனரலாகப் பதவி உயர்வும் அண்மையில் வழங்கப்பட்டது.
-
பிரதேச சபை அமைப்பது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆணைக்குழுவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய ஓட்டமாவடி பிரதேச சபை தீர்மானம்
(பழுளுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு;மட்டக்களப்பு, கிரான் தெற்கு பிரதேச சபை அமைப்பது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆணைக்குழுவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வது என ஓட்டமாவடி பிரதேச சபை தீர்மானித்துள்ளது.இது தொடர்பான ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஜுனைட் நளீமி விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
-
‘யுத்த காலத்திற்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள சமாதானச் சூழலை தொடர்ந்தும் பேணிப் பாதுகாக்க வேண்டும்’: இராணுவ கட்டளைத் தளபதி அத்துல கொடுப்பிலி
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: யுத்த காலத்திற்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள சமாதானச் சூழலை தொடர்ந்தும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என புனானை 23வது இராணுவ படைப்பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி அத்துல கொடுப்பிலி தெரிவித்தார். மட்டக்களப்பில் மட்டு முஸ்லிம் வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
-
நினைவுகூறப்படுமா இவ்வருட ‘சுஹதாக்கள் தினம்’?
AK-42 காத்தான்குடி: 1990-08-03 காத்தான்குடி பள்ளிவாயல் படுகொலைக்குப் பின்னர் 1991 இல் இருந்து கடந்த வருடம்வரை வருடாந்தம் குறித்த தினத்தில் நினைவுகூர்ந்து வந்த ‘சுஹதாக்கள் தினம்’ இவ்வருடம், நாளை மறுதினம் அதாவது சனிக்கிழமையாகும்.
-
அரசாங்கத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு: ரிஷாத் பதியுத்தீன்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: வடக்கில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளை மேலும் அதிகரிப்பதற்கு மற்றுமொரு சந்தர்ப்பம் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்கு வடமாகாண சபை தேர்தலில் ஆதரவு வழங்குவது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
-
எமது வேண்டுகோளும் மின்சார சபையின் உடனடி நடவடிக்கையும்..
காத்தான்குடி: கடந்த 29-07-2013 அன்று எமது இணையத்தளத்தில் வெளியான ‘இரவு நேர தெருவிளக்குகள் இன்றி மக்கள் அவதி…’ எனும் தலைப்பிடப்பட்ட செய்தியைத் தொடர்ந்து, இரு நாட்களுக்குள் காத்தான்குடி மின்சார சபையினர் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை தற்பொழுது மக்களிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.