மட்டு-மாமாங்கத்தில் – மாமாங்க மழையகம் எனும் பெயரில் விளையாடலாம் சிந்திக்கலாம் வாங்க எனும் சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வு முகாம்

2பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ,அங்கவீனமுற்ற ,இடம்பெயர்ந்த பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான சிறுவர்களின் சமூக பொருளாதார சூழலை மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. அமைப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவுடன் இனைந்து சேவ்த சில்ரன் சிறுவர் அமைப்பின் அனுசரனையுடன் கிழக்கு மாகாணத்தில் பிரசித்திபெற்ற மட்டு-மாமாங்கம் மாமாங்கேஸ்வரா ஆலய கும்பாவிஷேஷ விஷேட நிகழ்வு இடம்பெறும் பகுதியில் மாமாங்க மழையகம் எனும் பெயரில் விளையாடலாம் சிந்திக்கலாம் வாங்க எனும் சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வு முகாமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

சிறுவர்களுக்காக அமைக்கப்பட்ட குறித்த சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வு முகாமை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் டி.டி.டேவிட் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் வாசுதேவன் இவ் விழிப்புணர்வு முகாமின் நடாவை வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் சிறுவர்கள் எவ்வாறான சிறுவர் துஷ்பிரயோக உள்ளாகும் செயல்களை ஒரு தாளில் எழுதி ஒரு வெற்றுப்பானையில் வைக்கப்பட்ட மொழுதுதிரியில் அதனை எரித்து அவர்களின் கருத்துரைகளை வழங்கினர்.

இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் வாசுதேவனுக்கு மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. அமைப்பின் பொது செயலாளர் டாக்டர் டி.டி.டேவிட் நினைவுப் பரிசொன்றை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதெச செயலாளர் கிரிதரன்,மன நல வைத்திய அதிகாரி கடம்பநாதன் மற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகர்கள், மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. அமைப்பின் பிரதிநிதிகள் சிறுவர்கள் ,பொது மக்கள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

நேற்று புதன்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்ட இவ் சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வு முகாமை மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ. நிறுவனமும் சிறுவர் பாதுகாப்பு நிறுவனமும் இணைந்து எதிர்வரும் 6ஆம் திகதி வரை நடாத்தவுள்ளம குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment