மட்டக்களப்பு: யுத்த காலத்திற்கு பின்னர் இலங்கையில் ஏற்பட்டுள்ள சமாதானச் சூழலை தொடர்ந்தும் பேணிப் பாதுகாக்க வேண்டும் என புனானை 23வது இராணுவ படைப்பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி அத்துல கொடுப்பிலி தெரிவித்தார். மட்டக்களப்பில் மட்டு முஸ்லிம் வர்த்தகர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
கிழக்கு மாகணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் சிங்கள,முஸ்லிம்,தமிழர்,கிறிஸ்தவர்கள் என பலரும் வாழ்கின்ற ஒரு மாவட்டமாகும்.
ஆகவே இந்த மாவட்டத்தில் இன,மத,மொழி பேதம் என்பவற்றிற்கு அப்பால் புரிந்துணர்வுடன் ஒற்றுமயாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
30வருட கால யுத்தத்திற்கு பின்னர் இலங்கைத் தீவில் சமாதானமாகவும் சமூக நல்லிணக்கத்துடனும் வாழும் சூழல் உருhகியுள்ளது.
இந்த சூழலை தொடர்ந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இலங்கை மக்களாகிய எங்களுக்கு உள்ளது.
முஸ்லிம்கள் உலகளாவிய ரீதியில் 200கோடிக்கும் அதிகமானோர் புனித நோன்பை நோற்று வருகின்றனர்.
இந்த மாதம் முஸ்லிம்களின் புனித வேதமாகிய அல்குர்ஆன் இறக்கப்பட்ட மாதம்.
இதில் முஸ்லிம்கள் நோன்பு நோற்க வேண்டும் என்பதுடன் ஏழைகளுக்கு உதவி செய்தல்,வறுமை நிலையை உணர்ந்து செயற்படல்,பொறமையை கடைப்பிடித்தல்,மாற்றுமதத்தவர்களுடன் சமாதானமாக நடந்து கொள்ளல் உள்ளிட்ட விடயங்களையும் அவர்களுக்கு இஸ்லாம் வலியுறுத்துகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Leave a comment