பிரதேச சபை அமைப்பது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆணைக்குழுவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய ஓட்டமாவடி பிரதேச சபை தீர்மானம்

photo(5)(பழுளுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு;மட்டக்களப்பு, கிரான் தெற்கு பிரதேச சபை அமைப்பது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆணைக்குழுவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வது என ஓட்டமாவடி பிரதேச சபை தீர்மானித்துள்ளது.இது தொடர்பான ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஜுனைட் நளீமி விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘கிரான் பிரதேச செயலகத்துடன் அலுவலக நடவடிக்கைக்காக தற்காலிகமாக இணைப்புச் செய்யப்பட்டுள்ள ஓட்டமாவடி பிரதேச சபைக்கு சொந்தமான ஆறு கிராம சேவையாளர் பிரிவுகளை புதிதாக அமையவுள்ள கிரான் பிரதேச சபையுடன் இணைப்பதற்கான மறைமுக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக தற்காலிக ஆணைக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு பொதுமக்களது அபிப்பிராயங்களை கோரியுள்ளதுடன் அறிக்கையினையும் தயார்படுத்தி வருகின்றது. இந்த ஆணைக்குழுவில் பிரதேச நிர்வாக பிரிவிற்குற்பட்ட எவ்வித முஸ்லிம் பிரதிநிதிகளும் உள்வாங்கப்படாமை திட்டமிட்ட ஒரு புறக்கணிப்பாக அமைந்துள்ளது.

இந்தகிராம சேவகர் பிரிவுகளில் பெரும்பான்மையாக முஸ்லிம்களே காணி உரித்துடையவர்களாககாணப்படுகின்றனர். இந்த நிலையில் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாமல் அமையப்பெறும் எத்தகைய தீர்வு முயற்சியும் இனங்களுகிடையே பாரியய விரிசலை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

எனவே குறித்த பிரதேச சபை அமைத்தல் மற்றும் காணி பகிர்வு தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்பதுடன் அமைந்துள்ள கொமிஷனில் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படக் கோரியும் நீதிமன்ற்தில் வழகுத் தாக்கல் செய்வது என ஓட்டமாவடி பிரதேச சபையில் நேற்று புதன்கிழமை தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

Published by

Leave a comment