பாதுகாப்புச் செயலாளர் கோட்டாவின் இப்தார் கொழும்பு ரமடா ஹோட்டலில்

P7310348பழுளுல்லாஹ் பர்ஹான்

கொழும்பு: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு வியாழக்கிழமை மாலை கொழும்பு ரமடா ஹோட்டலில் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து 42 முஸ்லிம் பிரதிநிதிகள் விஷேட ஹெலி விமானத்தின் மூலம் இவர்கள் கொழும்புக்கு இன்று மாலை அழைத்துச் செல்லப்பட்டு இந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டனர். 

OLYMPUS DIGITAL CAMERA

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களில் இருந்து முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவருமான என்.எம்.அமீன், இரானுவ உயர் அதிகாரிகள், படைத்தளபதிகள், பொலிஸ் உயரதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

P7310348

இந்த இப்தார் நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள பள்ளிவாயல் சம்மேளன பிரதிநிதிகள் மற்றும் உலமா சபை பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment