செப்டெம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை தேர்தல்!

northகொழும்பு: இலங்கையில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்திருக்கின்றார். மத்திய மாகாண சபை,வடமேல் மாகாண (வயம்ப) சபை மற்றும் வடமாகாண சபை ஆகியவற்றுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் முதலாம் திகதி வியாழக்கிழமை நண்பகல் 12 மணியுடன் முடிவடைந்ததையடுத்து, இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டிருக்கின்றது.

வடமாகாண சபைக்கான தேர்தல் பல்வேறு இழுபறிகள், விமர்சனங்களுக்கு மத்தியில் மிகவும் தாமதமாக நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் மாத்திரம் 11 அரசியல் கட்சிகளும், 12 சுயேச்சை குழுக்களும் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றன.

வவுனியா மன்னார் முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டடங்களிலும் நாட்டின் முக்கிய கட்சிகள் பலவும் களத்தில் இறங்கியிருக்கின்றன. அவற்றுடன் பல சுயேச்சை குழுக்களும் போட்டியிட முன்வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தலில் மொத்தமாக 142 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளார்கள். வட மாகாண சபைக்கென 36 உறுப்பினர்கள் வாக்களிப்பின் மூலம் முதல் முறையாகத் தெரிவு செய்யப்படவுள்ளனர். நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சி வவுனியாவில் இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

Published by

Leave a comment