Category: Your Kattankudy
-
கிண்ணியா நகரபிதா ஹில்மி மஹ்ரூப் பிரதேச மீன் சந்தைகளுக்கு திடீர் விஜயம்
– ரைஸ் கிண்ணியா: வெளியிடங்களிலிருந்து விற்பனைக்காக கிண்ணியாவுக்கு கொண்டுவரப்படும் மீன்கள் அனைத்தையும் பரிசோதனைக்கு உட்படுத்தும் திடீர் நடவடிக்கை கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நேற்று இடம்பெற்றது. மீன் விற்பனை நிலையங்களுக்கு நேரடியாக நகரபிதா விஜயம் செய்து பார்வையிட்டதோடு பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.
-
தீயில் கருகிய வர்த்தக நிலையம்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: புத்தளம் நகரில் இன்று( 2013.08.29) அதிகாலை 1.30 மணியளவில் வர்த்தக நிலையமொன்று முழுமையாக தீயில் கருகியதுடன். அதனை அணைக்கச் சென்ற 3 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதி்க்கப்பட்டுள்ளர்.
-
உலக மக்களின் இதயத்தைத் தொட்ட அந்த ஒரு சிறிய கடிதம்….!
– OiT, MJ லண்டன்: ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் பகுதிக்கு ஒரு வாசகர் எழுதிய சிறிய கடிதம் இப்போது உலகளவில் பெரும் பிரபலமாகிவிட்டது. இண்டர்நெட்டில் சமீபகாலத்தில் மிக அதிகமாக Share செய்யப்பட்ட கடிதமாக இது மாறிப் போய் உள்ளது. இங்கிலாந்தின் The Financial Times பத்திரிக்கைக்கு கே.என். அல் சபா என்ற வாசகர் எழுதிய ஓர் கடிதமே இன்று உலகைக் கலக்கிக் கொண்டிருக்கின்றது.
-
‘தவறுக்கு வருந்துகிறோம்’ -இங்கிலாந்து கிரிக்கட் வீரர்கள்
லண்டன்: ஆஷஸ் தொடரை வென்ற உற்சாகத்தில் மைதானத்தில் சிறுநீர் கழித்தது தவறான ஒன்று தான் என இங்கிலாந்து வீரர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றதைத் தொடர்ந்து லண்டன் ஓவல் மைதானத்தில் அமர்ந்து கொண்டாடினர். அப்போதுதான் பிட்ச்சில் சில வீரர்கள் சிறுநீர் கழித்து அசிங்கமாக நடந்து கொண்டனர்.
-
புதிய அமைச்சின்முதல்பணி “நாய்களின் திருமணமே” : ஹரிஸன்
கொழும்பு: பொலிஸ் திணைக்களம் புதிய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டதன் பின்னர் செய்த முதலாவது கடமை நாய்களுக்கு திருமணம் செய்துவைத்தமையாகும். என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு இது நல்லதொரு உதாரணமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
-
நவி பிள்ளை வெளியே! இராணுவம் உள்ளே…!
யாழ்ப்பாணம்: ஐநா மனித உரிமைகளுக்கான ஆணையர் நவிப்பிள்ளை அவர்கள் வடபகுதிக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தையடுத்து, முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்ட இலங்கை இராணுவத்தினர் புதனன்று மீண்டும் வீதிகளில் தமது கடமைகளில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சிரிய நெருக்கடி: ஐநா தீர்மானத்தை பிரிட்டன் முன்மொழிந்தது
லண்டன்: டமஸ்கஸின் புறநகர் பகுதியில் கடந்த வாரம் நடந்த இரசாயன தாக்குதலுக்கு சிரியாவின் அரசாங்கமே பொறுப்பு என்று குற்றஞ்சாட்டியும், அங்கு மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை தேவை என்று கோரியும் பிரிட்டன், ஐநா பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானத்தை கொண்டுவருகிறது.
-
தானம் இது என் மரண சாசனம்
– பிரகாசக்கவி என் பிடரியின் பின் ஆசனத்தில் பிம்பங்களில்லா பிரளயமாய் என் மரணம்
-
முஸ்லிம்களுக்கு எதிரான மத காலாசார உரிமை மீறல்கள் தொடர்பில் நவநீதம்பிள்ளையிடம் PMGG அறிக்கை சமர்ப்பிப்பு
– PMGG ஊடகப் பிரிவு: இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் மத உரிமை மீறல்கள், இனவாத அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றினை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் நேரில் கையளித்தது.
-
கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்தார் நவநீதம் பிள்ளை
திருகோணமலை: திருகோணமலைக்கு விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அத்மிரல் மொஹன் விஜயவிக்ரமவை சந்தித்து கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகள் மற்றும் பிரச்சினைகள்கள் தொடர்பாக கேட்டறிந்தார்.
-
‘பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவேன்’ – நவநீதம்பிள்ளை
முள்ளிவாய்க்கால்: காணாமல்போனோர் விவகாரம் உட்பட யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆழமாகக் கவனம் செலுத்தி அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க எனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்துவேன். பாதிக்கப்பட்ட உங்களது ஆதங்கங்கள் எனக்கு புரிகின்றது என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
-
சிரியாவின் மீது போர் தொடுக்க மேற்கத்திய நாடுகள் திட்டம்!
டமஸ்கஸ்: சிரியாவின் மீது போர் தொடுக்க மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிரியாவில் ஜனாதிபதிக்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது, கடந்த 21ம் திகதி இராணுவம் இரசாயன தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாயினர். இதற்கு ஐ.நா சபை உட்பட பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.