தானம் இது என் மரண சாசனம்

cemetary_main[1]– பிரகாசக்கவி

என் பிடரியின்
 பின் ஆசனத்தில்

 பிம்பங்களில்லா பிரளயமாய்
 என் மரணம்

 நீர்க்குமிழி போல
 உப்பிக்கிடக்கிறது !

சில கனப்பொழுதில்
 நிமிடங்களை வினாடிகள்
 விழுங்கிவிடவும்கூடும் .

அந்த நிகழ் பொழுதில் நான் !

பிணமெனும் பிண்டமாய்
 மா ( நா ) ரிப் போவேன்

 ஆனாலும்

 நான் எனும் நான் செத்து

 நீ ஆகி
 உன் இதயமாக

 அவனாகி
 அவன் இரு கண்களாக

 அவளாகி
 அவள் உள் உறுப்பாக

 இவ் வையகத்தில்
 வாழ்வாங்கு வாழப் போகிறேன் !

Published by

Leave a comment