கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்தார் நவநீதம் பிள்ளை

nawaneetham-in-trinco-1_200_150[1]திருகோணமலை: திருகோணமலைக்கு விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அத்மிரல் மொஹன் விஜயவிக்ரமவை  சந்தித்து கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகள் மற்றும் பிரச்சினைகள்கள் தொடர்பாக கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து மாவட்ட செயலாளர் மேஜர் ஜெனெரல் ரீ.ரீ.ரஞ்சித் டி சில்வாவையும் சந்தித்தார்.

இதேவேளை திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு முன் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை- மட்டக்களப்பு. அம்பாறை- பொத்துவில் ஆகிய இடங்களைச் சேர்ந்த மக்கள் காணாமற்போன தமது உறவுகளை கண்டுபிடித்துத்தருமாறு கோரி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

-GA

Published by

Leave a comment