‘தவறுக்கு வருந்துகிறோம்’ -இங்கிலாந்து கிரிக்கட் வீரர்கள்

ykkலண்டன்: ஆஷஸ் தொடரை வென்ற உற்சாகத்தில் மைதானத்தில் சிறுநீர் கழித்தது தவறான ஒன்று தான் என இங்கிலாந்து வீரர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றதைத் தொடர்ந்து லண்டன் ஓவல் மைதானத்தில் அமர்ந்து கொண்டாடினர். அப்போதுதான் பிட்ச்சில் சில வீரர்கள் சிறுநீர் கழித்து அசிங்கமாக நடந்து கொண்டனர்.

இந்த நிலையில் தங்களது செயலுக்காக இங்கிலாந்து வீரர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், எங்களது கொண்டாட்டத்தில் கிரிக்கெட் போட்டிக்கும், மைதானத்திற்கும், கிரிக்கெட் ரசிகர்களுக்கும் அவமரியாதை ஏற்படுத்தும் எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை.

நாங்கள் கிரிக்கெட்டை நேசிக்கிறோம், கிரிக்கெட்டுக்கு மரியாதை செலுத்துகிறோம்.

எதிராளிகளையும் நேசிக்கிறோம், நாங்கள் விளையாடும் மைதானத்தையும் நேசிக்கிறோம்.

இருப்பினும் எங்களில் சிலரின் நடத்தை பொருத்தமற்றது என்பதை ஒத்துக் கொள்கிறோம்.

அவர்களின் நடத்தை யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.

இது எதேச்சையாக நடந்ததே தவிர திட்டமிட்டு எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

இதற்கிடையே இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரீம் ஸ்வான், எங்களது வீரர்கள் மைதானத்தின் நடுவே பிட்ச் பகுதியில் அமர்ந்து பீர் சாப்பிட்டது உண்மைதான் என்றும், இருட்டாக இருந்ததால் சரியாக தெரியாமல் போயிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். LS

Published by

Leave a comment