பெண் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு மனித நேய விருது

malalaலண்டன்: பெண்பிள்ளைகளின் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு ஹார்வர்டு பல்கலைகழகம் இந்த ஆண்டுக்கான மனித நேய விருது வழங்கி கெளரவித்துள்ளது. பாகிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்த மலாலா, தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். இதனையடுத்து தீவிர சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தவர், உலகம் முழுவதும் பெண் கல்வியை வலியுறுத்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இவரது சேவையை பாராட்டி ஹார்வர்டு பல்கலைக்கழகம் 2013 ஆம் ஆண்டுக்கான “பீட்டர் ஜெ ஹோம்ஸ் மனித நேய விருது” வழங்கி கௌரவித்தது.

இந்த விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. ஹார்வர்டு பல்கலைக்கழகத் தலைவர் ட்ரூ ஜில்பின் பாஸ்ட் வரவேற்றார்.

ஹார்வர்டு ஃபவுண்டேஷன் இயக்குநரும், ஹார்வர்டு மருத்துவ கல்லூரி பேராசிரியருமான டாக்டர் எஸ்.ஆலென் கவுன்டர் விருதை வழங்கினார்.

விருதைப் பெற்றுக் கொண்ட மலாலா, மருத்துவராகி நோயாளிகளுக்குச் சேவை செய்வதை விட அரசியலுக்கு வரவே விரும்புகிறேன். அதன் மூலம் பொதுமக்களுக்கு நேரிடையாக தொண்டாற்ற முடியும்.

பாகிஸ்தானில் பெண்களும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அவர்களும் சிறப்பு மிக்க ஹார்வர்டு பல்கலைகழகத்தில் பயில வேண்டுமென விரும்புகிறேன்.

எனது வாழ்க்கைப் பயணத்தில் என்றாவது ஒரு நாள் பாகிஸ்தானுக்கு திரும்பச் செல்வேன்.

அப்போது அங்கு ஹார்வர்டு போன்று உயரிய பல்கலைக்கழகத்தை உருவாக்க முயல்வேன் என்று தெரிவித்துள்ளார்.

malala

Published by

Leave a comment