Category: Your Kattankudy
-
கோத்தபாய கலமிறங்கலாம்!
கொழும்பு: பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை மேல் மாகாண சபைத் தேர்தல் மூலம் அரசியலுக்குள் கொண்டுவரத் தீர்மானம் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அடுத்த வருடம் நடத்தப்பட உள்ள மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் கரு ஜயசூரிய முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டால், கோத்தபா ராஜபக்ஷவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
-
இரண்டு நாள் அவகாசம் வேண்டும்: ரணில்
கொழும்பு: ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அந்த கட்சியின் ஐக்கிய பிக்கு முன்னணி விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் காலஅவகாசம் கேட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவுடன் முன்னணி அண்மையில் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த கோரிக்கையை முன்வைத்ததாக ஐக்கிய பிக்கு முன்னணியின் செயலாளர் சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.
-
எதிர்க்கட்சி நிபந்தனைக்கு அடிபணிய மாட்டேன் – ஒபாமா அறிவிப்பு
– SHM வாஷிங்டன்: அமெரிக்காவில் தொடர்ந்து 5 நாட்களாக அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், எதிர்கட்சிகளின் நிபந்தனைகளுக்கு அடிபணியப் போவதில்லை என அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப் படுத்திய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு செனட்சபை ஒப்புதல் கொடுத்து விட்டது.
-
கிழக்கிலிருந்து பணிப்பெண்கள் வெளிநாடு செல்வதை தடுப்பேன்- ஹாபிஸ் நசீர்
ஏறாவூர்: கிழக்கு மாகாணம் அனைத்து வளங்களும் நிறைந்த மாகாணமாகும். இந்த மாகாணத்தின் வளத்தினை பயன்படுத்தினால் அனைவருக்கும் இங்கு தொழில் வாய்ப்பு இருக்கின்றது. இங்குள்ள வளங்களை பயன்படுத்தி தொழில்களில் ஈடுபட்டால் பணிப்பெண்களாக வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் வராது.
-
மாத்தறையில் UNP ஆதரவாளர்கள் ஏட்டிக்குப் போட்டியாக ஊர்வலம்: பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் 7 பேர் காயம்
மாத்தறை: மாத்தறை நகரப் பகுதியில் நேற்று ஏற்பட்ட மோதலில் எழுவர் காயமடைந்துள்ள நிலையில் ஒருவரது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக மாத்தறை வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன. மோதல் ஏற்பட்ட நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டின் காரணமாக இவர்கள் காயமடைந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை பதவியிலிருந்து நீக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
-
இலங்கையில் அடுத்த வருடம் முதல் சர்வதேச தரத்திலான கடவுச்சீட்டுக்கள்
கொழும்பு: இலங்கை கடவுச்சீட்டை சர்வதேச தரத்திற்கு அமைவான புகைப்படத்துடன் அடுத்த வருடம் முதல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் டப்ளியூ.ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்தார்.
-
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று பொது மக்களை சந்திப்பார்
– முகம்மட் பயாஸ் காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எம்.எல்.எ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று காலை 6மணி முதல் பகல் 12மணிவரை பொது மக்களை சந்திக்கவுள்ளதாக பிரதியமைச்சரின் ஊடக செயலாளர் முகம்மட் சஜி தெரிவித்தார்.
-
தயடகிருள தொடர்பான அபிவிருத்தி கூட்டம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில்
– பழுளுல்லாஹ் பர்ஹான், முகமட் சஜி காத்தான்குடி: 2013 தயடகிருள அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டமும் எஞ்சிய நிதியில் அபிவிருத்தியை மேற்கொள்வது தொடர்பாக ஆராயும் கூட்டமும் சனிக்கிழமை காலை பெருளாதார அபிவிருத்தி அமைச்சின்
-
13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 5 மாவட்டங்களிலுள்ள செவிப்புலனற்றோருக்கான விளையாட்டு விழா மட்டுவில் ஆரம்பம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள 5 மாவட்டங்களிலுள்ள செவிப்புலனற்றோருக்கான விளையாட்டு விழா சனிக்கிழமை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதனாத்தில் ஆரம்பமானது.
-
மட்டு மாவட்டத்தில் முறையாக சீல் பண்ணப்படாத தராசுகளை கைப்பற்றும் நடவடிக்கை ஆரம்பம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்புமாவட்டத்தில் முறையாக சீல் பண்ணப்படாத தராசுகளை உபயோகிக்கும் வர்த்தகர்களின் தராசுகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு வருகின்றன. வர்த்தக நிலையங்கள் உட்பட அங்காடி நிலையங்கள் என்பவற்றில் இதுவரையில் முறையாக சீல் பண்ணப்படாத தராசுகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டன.
-
‘உபகார’ வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 119அரசாங்க ஊழியர்களுக்கு வீடமைப்புக் கடன் கொடுப்பனவுப் பத்திரம் வழங்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனை ‘ஜனசெவன’ 10 இலட்சம் வீட்டுத்திட்டத்தின் ஓர் அங்கமான அரசாங்க ஊழியர்களுக்கான ‘உபகார’ வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணத்துறை ,பொறியியல் சேவைகள் ,வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் வீடமைப்புக் கடன் திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது.
-
ஜப்பானை அச்சுறுத்தும் ‘பிடோவ்’ புயல்!
– SHM டோக்கியோ: ஜப்பானின் தென்புறத் தீவுப் பகுதிகளான ஒகினாவில் இன்று சக்தி வாய்ந்த சூறாவளிப் புயலான ‘பிடோவ்’ தாக்கக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து அங்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.