13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 5 மாவட்டங்களிலுள்ள செவிப்புலனற்றோருக்கான விளையாட்டு விழா மட்டுவில் ஆரம்பம்

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 13வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள 5 மாவட்டங்களிலுள்ள செவிப்புலனற்றோருக்கான விளையாட்டு விழா  சனிக்கிழமை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதனாத்தில் ஆரம்பமானது.

கொழும்பு,மட்டக்களப்பு,திருகோணமலை,வவுனியா,யாழ்ப்பானம் ஆகிய 05மாவட்டங்களைச் சேர்ந்த செவிப்புலனற்றோருக்கான இந்த விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வில் செவிப்புலன் அற்றோருக்கான மரதன் ஓட்டம்,சைக்கிளோட்டப் போட்டி என்பன நடைபெற்றன.

காலை 08.00 மணியளவில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்திற்கு முன்பாகவிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த மரதன் ஓட்டம் கல்லடி வரைக்கும் சென்று மீண்டும் மட்டு இந்துக் கல்லூரி மைதானத்திற்கு வந்தடைந்தது.

இதில் மட்டக்களப்பு கரவெட்டியைச் சேர்ந்த செவிப்புலனற்ற கே.சுதாகரன் முதலாமிடத்தைப் பெற்றார்.

அதற்கடுத்ததாக சைக்கிளோட்டப் போட்டி மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்திற்கு முன்பாகவிருந்து ஆரம்பிக்கப்பட்டு தன்னாமுனை வரைக்கும் சென்று மீன்டு இந்துக்கல்லூரி மைதானத்திற்கு வந்தடைந்தது.

இத தவிர கிரிக்கட் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இதில் இன்று இடம்பெறவுள்ளதோடு இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நாளை ஞாயிற்றுக்கிழமை இந்துக்கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

???????????????????????????????

???????????????????????????????

???????????????????????????????

Published by

Leave a comment