தயடகிருள தொடர்பான அபிவிருத்தி கூட்டம் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தலைமையில்

kattankudy– பழுளுல்லாஹ் பர்ஹான், முகமட் சஜி

காத்தான்குடி: 2013 தயடகிருள அபிவிருத்தி திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டமும் எஞ்சிய நிதியில் அபிவிருத்தியை மேற்கொள்வது தொடர்பாக ஆராயும் கூட்டமும் சனிக்கிழமை காலை பெருளாதார அபிவிருத்தி அமைச்சின் மட்டக்களப்பு காத்தான்குடி பிராந்திய காரியாலயத்தில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது கடந்த காலங்களில் காத்தான்குடி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தயடகிருள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் எதிர்வரும் காலங்களில் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு இது தொடர்பான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் காத்தான்குடி நகரசபையின் பதில் தவிசாளர் எம்.ஐ.எம் ஜெசீம், காத்தான்குடி பிரதேச செயலகத்தின் திட்டமிடல் அதிகாரி எஸ்.கருணாகரன், காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர்அஹமட் அப்கர்,பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் முகம்மட் றுஸ்வின் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

kattankudy (2)

kattankudy

hizbullah jazeem

Published by

Leave a comment