கிழக்கிலிருந்து பணிப்பெண்கள் வெளிநாடு செல்வதை தடுப்பேன்- ஹாபிஸ் நசீர்

hafeez nazeerஏறாவூர்: கிழக்கு மாகாணம் அனைத்து வளங்களும் நிறைந்த மாகாணமாகும். இந்த மாகாணத்தின் வளத்தினை பயன்படுத்தினால் அனைவருக்கும் இங்கு தொழில் வாய்ப்பு இருக்கின்றது. இங்குள்ள வளங்களை பயன்படுத்தி தொழில்களில் ஈடுபட்டால் பணிப்பெண்களாக வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் வராது.

எதிர்காலத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்கள் வெளிநாட்டுக்கு செல்வதை முற்றாக தடுப்பதற்காக மாற்று தொழில் நடவடிக்கைகளை நாம் இந்த மாகாணத்தில் ஏற்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் இரண்டு கிராமங்களை தெரிவு செய்து இன்னும் நான்கு ஐந்து வருடங்களுக்குள் அந்த பிரதேசத்திலிருந்து எந்தவொரு பெண்ணும் பணிப் பெண்ணாக வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்ற நிலையை உருவாக்குவதே எனது இலக்காகும். TK

Published by

2 responses to “கிழக்கிலிருந்து பணிப்பெண்கள் வெளிநாடு செல்வதை தடுப்பேன்- ஹாபிஸ் நசீர்”

  1. இவ்வளவு காலமும் எங்க போனீங்க? யாரைய பிடிச்சு ஆஆஆட்டி

  2. தலையாட்டி பொம்மைகள் பார்த்திட்டு சும்மா இருக்கும் போது இந்த மனிசன் இதையாவது செய்கிறாரே, அதையாவது விடுங்க!.

Leave a comment