Category: Your Kattankudy
-
கோல்டன் பூட் விருது மெஸ்ஸிற்கு
பார்சிலோனா: ஜரோப்பிய உள்ளூர் போட்டிகளில் அதிக கோல் அடித்து சாதனை படைத்த அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்சிக்கு ‘தங்க பூட்’ விருது வழங்கப்பட்டுள்ளது. ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப்பில் நடைபெறும் 2012-2013 சீசனில் 46 கோல்கள் அடித்துள்ளார். இதற்காக இவருக்கு தங்க பூட் விருது வழங்கப்பட்டுள்ளது.
-
‘பட்ஜட்டில் பாதுகாப்பு அமைச்சுக்கான செலவு மீண்டும் அதிகரிப்பு’
கொழும்பு: அரசதுறையினர், விவசாயிகள் மற்றும் பெண் தொழில்முனைவோர் ஆகியோருக்கான சில நன்மைகளை பிரதிபலிக்கும் அம்சங்களுடன் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
-
கட்டிப்பிடிக்கும் இளைஞர்கள் சவூதியில் கைது!
ரியாத்: சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில், வழிப்போக்கர்களை இலவசமாக கட்டிப்பிடிக்க முன்வந்த இரு ஆண்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த இரு இளைஞர்களையும், விநோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும், பொது ஒழுங்கை மீறிய குற்றத்திற்காகவும் சௌதி அரேபியாவின் மதப் போலிசார் தடுத்து வைத்துள்ளனர்.
-
காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தின் முப்பெரும் விழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தின் முப்பெரும் விழா 21-11-2013 இன்று வியாழக்கிழமை காலை வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் வித்தியாலய அதிபர் ஐ.எல்.எம்.தாஸீம் தலைமையில் இடம்பெற்றது.
-
சம்மேளனத்தின் கூட்டு ஸகாத் நிதியத்தினால் தற்போது நிர்மாணிக்கப்பட்டிருக்கும் 2வது வீட்டுத்திட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வு நாளை
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கு மாகாணத்தில் இயங்கும் நிறுவனங்களில் பழமைவாய்ந்த நிறுவனமாகத் திகழும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் மஜ்லிஸுல் ஸுறா கூட்டு ஸகாத் நிதியத்தினால் தற்போது புதிய காத்தான்குடி நூராணியா மையவாடி வீதியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் 2வது வீட்டுத்திட்ட 8 வீடுகளை கையளிக்கும் 22-11-2012 திகதி நாளை வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி
-
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பின் வட மாகாண விஜயம்
PMGG ஊடகப்பிரிவு யாழ்ப்பாணம்: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மன்னார், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று பிரதேச முக்கியஸ்தர்கள், உலமாக்கள், வலயக்கல்விப் பணிப்பாளர், பாடசாலை அதிபர்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் என பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்தனர்.
-
இனவாதிகளின் சதி வலைகளில் அப்பாவி தமிழ் பேசும் மக்கள் விழுந்துவிட வேண்டாம் – ஹூனைஸ் பாருக்
இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் வவுனியா: இலங்கைக்கு எதிரான தேசத்துரோக செயற்பாடுகளுக்கான அடித்தளம் வேகமாக இடப்படுவதாக சுட்டிககாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், இந்த இனவாதிகளின் சதி வலைகளில் அப்பாவி தமிழ் பேசும் மக்கள் விழுந்துவிட வேண்டாம் என்றும் கோறிக்கைவிடுத்துள்ளார். கடந்த 30 வருடம் எமது
-
ஐரோப்பிய யூனியனின் உயரிய விருதைப் பெற்றார் மலாலா
லண்டன்: ஐரோப்பிய யூனியனின் உயரிய விருதான சகோரோவ் மனித உரிமைப் பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது. பாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காக போராடி வரும் சிறுமி மலாலா யூசுப்சாயை தலிபான்கள் சுட்டனர். மரணத்துடன் போராடி, தற்போது லண்டனில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
-
80 கொள்கலன்களில் பெரிய வெங்காயம்!
கொழும்பு: வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 80 கொள்கலன்கள் பெரிய வெங்காயம் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இதனையடுத்து ச. தொ. ச. மூலம் 130 ரூபாவுக்கு ஒருகிலோ பெரிய வெங்காயத்தை விற்பனை செய்ய முடியுமென வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
-
இறந்ததாக நினைத்து புதைத்த போது உயிர் பெற்ற குழந்தை: வைத்தியர் இடைநிறுத்தம்!
– SHM பீஜிங்: இறந்து விட்டதாக மருத்துவமனையில் சான்றிதழ் அளிக்கப் பட்ட ஒருமாதக் குழந்தை புதைப்பதற்காகக் கொண்டு சென்ற போது, உடலில் அசைவு உண்டானது. இதனைத் தொடர்ந்து உயிருடன் இருந்தக் குழந்தையை இறந்ததாக சான்றிதழ் கொடுத்த வைத்தியர் ‘சஸ்பெண்ட்’ செய்யப் பட்டுள்ளார்.
-
‘வவுனியா மாவட்டத்தில் நடை முறைப்படுத்தப்படும் இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பில் தெரிவுகளை மேற்கொள்வது இந்திய உயர் ஸ்தானிகர் ஆலயமே தவிர அரசியல் வாதிகள் அல்ல’ : அப்துல் பாரி
– இர்ஷாட் ரஹ்மதுல்லா வவுனியா: வவுனியா மாவட்டத்தில் நடை முறைப்படுத்தப்படும் இந்திய வீடமைப்பு திட்டம் தொடர்பில் தெரிவுகளை மேற்கொள்வது இந்திய உயர் ஸ்தானிகர் ஆலயமே தவிர அரசியல் வாதிகள் அல்ல என தெரிவிததுள்ள வவுனியா நகர சபையின் முன்னால் உறுப்பினரும், வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான அமைப்பின் தலைவருமான அப்துல் பாரி வவுனியாவில் உள்ள
-
சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வினியோம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு காத்தான்குடியையும் அதனைச் சூழ உள்ள இடங்களிலும் மரக்கன்றுகள் வினியோகிக்கப்பட்டது.