காத்தான்குடி: காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தின் முப்பெரும் விழா 21-11-2013 இன்று வியாழக்கிழமை காலை வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் வித்தியாலய அதிபர் ஐ.எல்.எம்.தாஸீம் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை-2013ல் சித்தியடைந்த சாதனையாளர்கள்,கோட்ட மட்டம் ,வலய மட்டம் ஆகிய மட்டங்களில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வெற்றியாளர்கள்,2012 ஆண்டு இறுதிப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வகுப்பில் முதன்மை பெற்ற மாணவர்கள்,2012ம் ஆண்டு இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் முதன்மை பெற்ற மாணவன் உட்பட அன்வர் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள்,பாடசாலைக்கு உதவியவர்கள் என பலர் அதிதிகளினால் விருதும் ,பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ் முப்பெரும் விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் கலந்து கொண்டதோடு கௌரவ மற்றும் விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அஹமட் லெப்பை,காத்தான்குடி நகர சபை முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர், பிரதேச கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம்.சுபைர் ,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான யூ.எல்.எம்.என்.முபீன் கல்விக்குழு செயலாளர் எம்.எச்.ஏ.எம்.இஸ்மாயில்,ஆசிரியர் ஜூனைட் உட்பட பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்,உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்,ஊர் பிரமுகர்கள் ,பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள், உடப்ட பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு பாடசாலை மாணவர்கள் ஆற்றல்களை பிரதிபலிக்கும் முகமாக பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment