கொழும்பு: வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் 80 கொள்கலன்கள் பெரிய வெங்காயம் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இதனையடுத்து ச. தொ. ச. மூலம் 130 ரூபாவுக்கு ஒருகிலோ பெரிய வெங்காயத்தை விற்பனை செய்ய முடியுமென வர்த்தக நுகர்வோர் விவகார அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அரசாங்கம் பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை குறைத்துள்ளதையடுத்து அவசர அவசரமாக தனியார் துறையினர் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறைவடையலாம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியள்ளார்.
நேற்றைய தினம் 80 கொள்கலன் பெரிய வெங்காயம் தனியார் துறையினரால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக ச. தொ. ச. தலைவர் நலின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
கடந்த சில தினங்களாக பெரிய வெங்காயம் ஒருகிலோ சந்தையில் 240 ரூபாவிற்குமிடைப்பட்டதாக விற்பனை செய்யப்பட்டது. மேற்படி இறக்குமதியையடுத்து பெரிய வெங்காயத்தின் விலை வெகுவாகக் குறையும் எனவும் அவர் தெரிவித்தார்.
Leave a comment