கட்டிப்பிடிக்கும் இளைஞர்கள் சவூதியில் கைது!

saudiரியாத்: சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில், வழிப்போக்கர்களை இலவசமாக கட்டிப்பிடிக்க முன்வந்த இரு ஆண்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த இரு இளைஞர்களையும், விநோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும், பொது ஒழுங்கை மீறிய குற்றத்திற்காகவும் சௌதி அரேபியாவின் மதப் போலிசார் தடுத்து வைத்துள்ளனர்.

தாங்கள் ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களையும் கட்டிப்பிடிக்க முன்வருவதை அவர்களே வீடியோ படம் எடுத்து அதை இணையத்தில் பிரசுரித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் சுமார் 10 லட்சம் பேருக்கும் மேற்பட்ட முறைகள் பார்க்கப்பட்டுள்ளது.

மதப்பொலிசார், அவர்களை இனி இது போல செய்ய மாட்டோம் என்று ஒரு உறுதிமொழியில் கையெழுத்துப் போட வைத்துள்ளனர்.

அவர்களின் இந்த நடவடிக்கைக்கு  சவூதி அரேபியாவின் சமூக வலையமைப்புகளில் கலவையான எதிர்வினைகள் வந்துள்ளன.BBC

Published by

Leave a comment