காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு காத்தான்குடியையும் அதனைச் சூழ உள்ள இடங்களிலும் மரக்கன்றுகள் வினியோகிக்கப்பட்டது.
இந் நிகழ்ச்சி நிரலின் ஆரம்ப நிகழ்வு கடந்த திங்கட்கிழமை காத்தான்குடி அஸ்-ஸஹ்றா பாலர் பாடசாலை வளாகத்தில் ஓ.எஸ்.ஏ. அமைப்பினது முதல்வர் இல்மி அஹமட் லெவ்வையினால் குறுகிய காலத்தில் பயன்தரும் மரக்கன்று நடப்பட்டது.
இந் நிகழ்வில் 167சீ தெற்கு கிராம உத்தியொகத்தர் றஊப் ஜேபி, ஓ.எஸ்.ஏ. அமைப்பின் பொருளாளர் தாஹிர் , அஸ்-ஸஹ்றா பாலர்பாடசாலையின் தலைவர் அஸீஸ் கத்தீப்மார் சங்கத்தின் உப தலைவர் பைறூஸ் ( பலாஹி ) உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வினியோகிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சி நிரலின் ஆரம்ப நிகழ்வு கடந்த திங்கட்கிழமை காத்தான்குடி அஸ்-ஸஹ்றா பாலர் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற போது ஓ.எஸ்.ஏ. அமைப்பினது முதல்வர் இல்மி அஹமட் லெவ்வையினால் குறுகிய காலத்தில் பயன்தரும் மரக்கன்று நடப்படுவதையும்,
நிகழ்வில் கலந்து கொண்ட 167சீ தெற்கு கிராம உத்தியொகத்தர் றஊப் , ஓ.எஸ்.ஏ. அமைப்பின் பொருளாளர் தாஹிர் , அஸ்-ஸஹ்றா பாலர்பாடசாலையின் தலைவர் அஸீஸ் கத்தீப்மார் சங்கத்தின் உப தலைவர் பைறூஸ் ( பலாஹி ) ஆகியோரையும் படங்களில் காணலாம்.



Leave a comment