கலாபூஷணம் விருது வழங்கல் விழா இம்மாதம் 15ஆம் திகதி

awards_200_134[1]கொழும்பு: கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 29 ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாபூஷணம் விருது வழங்கல் விழா எதிர்வரும் 15ஆம் திகதி மு.ப. 10.00 மணிக்கு கொழும்பு-07, றோயல் கல்லூரி நவரங்கஹல மண்டபத்தில் கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் ரீ.பீ. ஏக்கநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.

இலங்கையில் சகல மாவட்டத்தையும் பிரதிநித்துவப்படுத்தி 194 சிங்கள கலைஞர்களும் 70 தமிழ் கலைஞர்களும், 25 முஸ்லிம் கலைஞர்களும் இக்கலாபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இவர்களில் 42 பேர் நாடகத்துறையிலும் 21 பேர் இலக்கியத்துறையிலும் 64 பேர் ஓவியம் மற்றும் சிற்பத்துறையிலும் 15 பேர் இசைத்துறையிலும் 24 பேர் வேறு துறைகளிலும் கலாபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இம்முறை 80 வயதிற்கு மேற்பட்ட 20 கலைஞர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.55 சிங்கள கலைஞர்களும், யாழ் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவபடுத்தி 33 கலைஞர்களும் விருதுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

கலாபூஷணம் விருது பெறுவோர்க்கு பணப்பரிசும் மற்றும் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. இதனை கலாசார அலுவல்கள் திணைக்களம்இ இந்துசமய அலுவல்கள் திணைக்களம்இ முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளன. lk

Published by

Leave a comment