‘நாட்டுப்பற்று-சமூகப்பற்று’த் தொடர் டுபாயில் இன்று ஆரம்பம்!

Pakistan-vs-srilanka-2nd-T20-match-410x250[1]– MJ

டுபாய்: இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கட் தொடர் இன்று 11-12-2013 புதன்கிழமை டுபாய் நகரில் ஆரம்பமாகிறது. பாகிஸ்தான்-இலங்கை அணிகளுக்கிடையிலான 2009 ஆரம்பத் தொடரில் பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர், பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கட் தொடர்களை நடாத்த சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் தடைவிதித்திருந்தது.

அதன் பின்னர் பாகிஸ்தான் அணியின் தொடர்கள் அரபு இராச்சியத்தில் இடம் பெற்று வருகின்றன.

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெரும் முதலாவது இருபது20 போட்டி டுபாய் மைதானத்தில் உள்ளுர் நேரப்படி மாலை 8 மணிக்கு நாளை இடம் பெற இருக்கின்றது. இரு- இருபது20 போட்டிகளும், ஐந்து ஒருநாள் போட்டிகளும், மூன்று டெஸ்ட் போட்டிகளும் இடம் பெற இருக்கின்றன.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது சர்வதேச இருபது20 போட்டி செப்டம்பர் 17, 2007 ஜொஹன்ஸ்பேர்க் மைதானத்தில் இடம்பெற்றது. இதுவரை இடம்பெற்றுள்ள இரு அணிகளுக்குமிடையிலான பத்து சர்வதேச இருபது20 போட்டிகளில் பாகிஸ்தான் 6 போட்டிகளிலும், இலங்கை 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

132 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 77 போட்டிகளில் பாகிஸ்தானும் 50 போட்டிகளில் இலங்கையும் வெற்றிபெற்றிருப்பதுடன், ஒரு போட்டி சம நிலையிலும், 4 போட்டிகள் முடிவுகளின்றியும்  நிறைவடைந்திருக்கின்றன.
 
இரு அணிகளுக்குமிடையிலான 43 டெஸ்ட் போட்டிகளில் 16 போட்டிகளில் பாகிஸ்தானும், 10 போட்டிகளில் இலங்கையும் வெற்றிபெற்றிருப்பதுடன், 17 போட்டிகள் சம நிலையில் முடிவடைந்திருக்கின்றன.

Sri Lankan cricket captain Mahela Jayawa

இலங்கை கிரிக்கட் இரசிகர்களுக்கிடையே 1970களின் ஆரம்பத்தில் இருந்து ஏற்பட்டுவரும் நாட்டு-சமூகப் பற்றின் ஓர் வெளிப்பாடாக இலங்கை-பாகிஸ்தான் போட்டிகள் அமைந்து வருவது வரலாறு. எனினும் முஸ்லிம்கள் மீது அண்மைக்காலமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் பொதுபல சேனா இயக்கத்தின் அடாவடித் தனங்களின் பின்னர் இலங்கை அணியின் இரசிகர்கள் பலர் அமைதி காத்து வருகின்றனர்.

எனினும் ஓர் ‘சீசன்’ ஆரம்பித்ததுமே, இரசிகர்களிடையே களாட்டா ஆரம்பித்துவிடும். அது நேரடியாகவோ, முகநூல் மூலமாகவோ தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி பகிர்ந்துகொள்ள இலங்கை-பாகிஸ்தான் போட்டிகள் அமைகின்றன.

இலங்கை அணி சார்பாக இலங்கை அணியின் நம்பிக்கை துடுப்பாட்ட வீரரான மஹேல ஜயவர்த்தன இத்தொடரில் பங்கேற்கவில்லை.

தற்பொழுது க.பொ.த சா/த பரீட்சை இடம்பெற்றுவரும் ஓர் அரிய தருணத்தில் மாணவர்கள் தங்களது படிப்புக்களில் கவனம் செலுத்துவதுடன், ஏனையவர்கள், குறித்த மாணவர்களுக்கு இடையூறுகளல்லாமல் போட்டிகளை காணுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

Published by

Leave a comment