நானாட்டான் பி.செயலகத்தாக்குதல்- இன ஐக்கியத்தைச் சீர்குழைக்கும் செயல்

mannar– மன்னார் அம்பி

மன்னார்: மன்னார் மாவட்டத்தில் அரச இயந்திரத்தின் செயற்பாட்டை முழுமையாக ஸ்தம்பிதமடையச் செய்ததுடன், இப்பிரதேசத்தில் காணப்பட்ட இன ஜக்கியத்தை சீர்குலைக்கும் ஒரு செயலாக நானாட்டான் பிரதேச செயலகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தாம் கருதுவதாகவும், இதற்கு எவரும் பரிந்து பேசுவது முறையல்ல என தெரிவித்துள்ள மன்னார் அரசாங்க அதிபர் தேசப்பிரிய பொன்தீவு கண்டல் காணி தொடர்பில் பிரதேச செயலாளரால் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாற்றமாக எவ்வித அழுத்தத்தையும் தன்னால் பயன்படுத்த முடியாது என்றும் கூறியுள்ளார்.

பொன்தீவு கண்டல் காணிகள் உரிய முறையில் முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கப்ட்டுள்ள நிலையில் அதற்கு எதிராகவும், நானாட்டான் பிரதேச  செயலாளர் சந்திர அய்யாவை இலக்கு வைத்து நானாட்டான் பிரதேச செயலகத்தின் மீது இனவாத கும்பல் நடத்திய தாக்குதல் தொடர்பில், மன்னார் அரசாங்க அதிபருடன் இன்று இடம் பெற்ற கலந்துரையாடலின் போது இந்த கருத்தை அரசாங்க அதிபர் வெளியிட்டுள்ளார்.

மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப், கத்தோலிக்க பாதிரியார்கள், மற்றும் பொன்தீவு கண்டல் கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் இதன் போது சமூகமளித்திருந்துள்ளனர்.

நானாட்டான் பிரதேச செயலகம் தாக்குதல் தொடரல்பில் மன்னார் ஆயர் நியயாப்படுத்தல்களை முன் வைத்த போதுஇஅரசாங்கத அதிபர் என்ற வகையில் அரச இயந்திரத்தினை செயலிழக்கச் செய்யும் காரியத்தை எவர் செய்தாலும் அது பிழையானது.இந்த நிலை நீடிக்கும் எனில் இந்த மாவட்டத்தில் மக்களின் வாழ்வாதார திட்டங்களை் எதனையும் முன்னெடுக்க முடியாமல் போய்விடும்இஇந்த செயலை வண்மையாக நான் கண்டிப்பதுடன் தாக்குதல் தொடர்பில் உரிய நடவடிக்கைகெள் முன்னெடுக்கப்டும் என்று கூறி, இதற்கு மேல் இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவிப்பதானது நேரத்தை வீனடிக்கும் செயலென அங்கு அரசாங்க அதிபர் கூறியுள்ளார்.

அதே வேளை நானாட்டான் பிரதேச செயலகம் தாக்கப்பட்டது தொடர்பிலும்இபிரதேச செயலாளர் மீது அபாண்டங்களை தமிழ் தரப்புக்கள் தெரிவிப்பது தொடர்பிலும் தமது வண்மையான கண்டனத்தை தெரிவித்து நானாட்டான் உள்ளிட்ட மன்னார் மாவட்டத்தில் உள்ள ஏனைய நான்கு பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு முன்பாக செயலக அதிகாரிகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டதுடன், பிரதேச செயலகத்தை தாக்கி அரச சொத்துக்களுக்கு சேதமேற்படுத்தியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோறிக்கைகளை முன் வைத்தனர்.

 புதன்கிழமையும் போராட்டம் தொடருமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by

Leave a comment