காதான்குடி: காதான்குடி நகரசபையில் தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமைபுரியும் அப்துல் ஹலீம் ஜப்பானில் இயங்கும் ஐக்கிய நாடுகளின் அமைப்பான UNEP இன் அழைப்பினை ஏற்று 09/12/2013 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். இவர் அங்கு நடைபெரும் திண்மக்கழிவு முகாமைத்துவம் சம்மந்தமான பயிற்சி பட்டறையில் காத்தான்குடி நகரசபை சார்பாக கலந்துகொள்வதுடன் காத்தான்குடியைப் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றிணையும் இப்பயிற்சி பட்டறையில் சமர்பிக்கவுள்ளார்.
அத்துடன் காதான்குடியின் திண்ம முகாமைத்துவத்தை விருத்தி செய்வதற்கான உதவிகளையும் ஜப்பானில் இயங்கும் UNEP இடம் முன்வைத்து திட்ட அறிக்கையினை மகாநாட்டில் சமர்பிக்கவுள்ளார். இம்மகாநாட்டில் 28 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். இதில் இலங்கை சார்பாக காத்தான்குடி நகரசபை மாத்திரமே தெரிவு செய்யப்படுள்ளது என்பது முழு இலங்கை வாழ் மக்களும் பெருமைப்படவேண்டிய விடையமாக காணப்படுகிறது.
Published by


Leave a comment