அல்ஆமினா பாலர் பாடசாலை கலை விழா

???????????????????????????????– அபூ ஸலாமா

திருகோணமலை: 2013ஆம் ஆண்டுக்கான கல்வி நெறியைப் பூர்த்தி செய்த திருகோணமலை ஜமாலியா அல்ஆமினா பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் பரிசளிப்பு விழாவும் கடந்த சனிக்கிழமை 07.12.2013ஆம் திகதி சனிக்கிழமை தி/தி/ஜமாலியா முஸ்லிம் மஹா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தனிப்பட்ட மற்றும் குழு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் மாணவ மாணவிகள் பங்கு பற்றிய அறிவுக் களஞ்சிய போட்டி அனைவர்களினதும் பாராட்டைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஆர்.எம்.அன்வர் அவர்களும் கௌரவ அதிதிகளாக சமூக சேவையாளர் தேசமான்ய அல்ஹாஜ் எம்.பீ.எம்.ஸாஹிப், திருகோனமலை நகராட்சி மன்ற உறுப்பினர் திரு.கௌரி முகுந்தன், ஜமாலியா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் ஏ.ஜே.மஹ்ரூப், கொமைஷல் கிரடிட் நிறுவன அதிகாரி திரு.அசோக் குமார் ஆகியோர் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், நலன் விரும்பிகள் இன்னும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

???????????????????????????????

???????????????????????????????

???????????????????????????????

A2[1]

Published by

Leave a comment