Category: Your Kattankudy
-
உலகின் முதல் செயற்கை இருதயம் பொருத்தப்பட்டவர் தொழில்நுட்பக் கோளாறால் மரணம்
– S-90 பரீஸ்: உலகிலேயே முதன் முறையாக செயற்கை இருதயம் பொருத்தப்பட்ட நோயாளி ஒருவர், தனது செயற்கை இருதயம் எதிர்பாராத விதமாக செயல்பாட்டை நிறுத்தியதால் மரணமடைந்துள்ளார். பொதுவாக இருதய நோயினால் பாதிக்கப்படுபவர்களுக்கு மூளைச்சாவு ஏற்பட்ட வர்களிடம் இருந்து தானமாக பெறப்பட்டு இருதயம் பொருத்தப்படுவது வழக்கம்.
-
காத்தான்குடி நகர சபையின் உதவித் தவிசாளரின் அப்பட்டமான அதிகாரத் துஷ்பிரயோகததிற்கெதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அரச உயர் அதிகாரிகள் – PMGG நகர சபை உறுப்பினர் ஸபீல் நளீமி
PMGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: கடந்த 2013.09.21ம் திகதி காத்தான்குடி நகர சபையின் நான்கு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஜாமிஉழ்ழாபிரீன் மையவாடிக் காணி சம்பந்தமாக கலந்துரையாடுவதற்கு சபை அமர்வினை கூட்டுமாறு அக்காலப் பிரிவில் கடமையில் இருந்த பதில் நகர முதல்வரைக் கேட்டிருந்தோம். ஆனால், 2013.10.07ம் திகதி வரை எங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை என்பதனால் இவ்விடயம் சம்பந்தமாக உள்ளுராட்சி உதவி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியிருந்தோம்.
-
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அனுமதியில் ஐரோப்பிய யூனியன் உதவியில் 1548 மில்லியன் அபிவிருத்தி இவ் வருடம் மட்டக்களப்பில் அமுலாகும்
பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அங்கீகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவித் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ் வருடம் சுமார் 1548 மில்லியன் ரூபாவில் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.
-
கட்டாரில் -நஷ்டவாளிகள் யார்? ” என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு
கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி
-
ஆசிரியர் நிஸார் நீதி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்துக்கான சமாதான நீதவான நியமனம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் காத்தான்குடி இளைஞர் அமைப்பாளருமான இல்மி அஹமத் லெவ்வையின் வேண்டுகோளுக்கிணங்க நீதி அமைச்சர் றவூப் ஹக்கீமின் சிபாரிசில் நீதி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக
-
28 வருடங்களுக்கு பின்னர் யாழ்.தேவி புகையிரதம் பளைக்கு சென்றது
– பழுலுல்லாஹ் பர்ஹான் கிளிநொச்சி: 28 வருடங்களுக்கு பின்னர் யாழ்.தேவி நேற்று (04) பளை வரை சென்றுள்ளது. புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி பளை புகையிரத நிலையம் நேற்று காலை போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கம, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதி போக்குவரத்து
-
முன்னாள் பிரதியமைச்சர் எஸ். நிஜாமுதீன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டார்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: முன்னாள் பிரதியமைச்சர் எஸ். நிஜாமுதீன் செவ்வாய்க்கிழமை (4) காலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்னிலையில் அவரது இல்லத்தில் வைத்து அக் கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டார்.
-
பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டி 2014!
-டீன் பைரூஸ்- காத்தான்குடி:காத்தான்குடி பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டி (03.032014. செவ்வாய்க்கிழமை) காத்தான்குடி (தேசிய பாடசாலை) மைதானத்தில் பிரதேச கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ்.எஸ்எம்.எம்.சுபைர்.BA(Hons) தலைமையில் நடைபெற்றது.
-
பிரபல மார்க்கப் பேச்சாளர் அஷ் ஷெய்க் அப்துல்லாஹ் மக்கி (காஷிfபி) அவர்களின் காத்தான்குடி விஜயமும் பயான் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களும்
SL Youth 06.02.2014 வியாழக்கிழமை »• ஜாமியதுல் ஃபலாஹ் அரபுக்கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கான விஷேட நிகழ்ச்சி நேரம் – காலை 10.00 – 11.15 »• பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி – மஸ்ஜிதுல் பிர்தௌஸ் புதிய காத்தான்குடி நேரம் – மாலை 04.15 – 05.30
-
கல்முனை கல்வி வலய ஆரம்பப் பள்ளி ஆசிரியைகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
றிஸ்கான் முஹம்மட் கல்முனை: தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் எதிர்கால செயற் திட்டத்திற்கு அமைய பிரதேச அபிவிருத்தி சமூக மேம்பாட்டுத் திட்டங்களை அமுல்படுத்தும் உபாயங்களுள் ஒன்றான ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சித் திட்டங்கள் தற்போது திருப்திகரமான முறையில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
-
மின்தடையால் இரசிகர்கள் திண்டாட்டம்!
நமது நிறுபர் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் இன்று இரவு சுமார் 8:30 மணியளவில் மின்சாரத் தடை ஏற்பட்டதால், இறுதி நேரத்தில் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருந்த பாகிஸ்தான்-பங்களாதேஷ் போட்டியை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்த கிரிக்கட் இரசிகர்கள் மன உளைச்சலுக்குள் ஆளானார்கள்.
-
ஆசியக் கிண்ணம்: பதினான்கு வருடங்களின் பின் இறுதிப்போட்டியில் மீண்டும் இலங்கை-பாகிஸ்தான் அணிகள்!
-MJ மேர்புர்: ஆசியக் கிண்ணப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் தெரிவுசெய்யப்பட்டிருப்பது குறிப்பாக இலங்கை கிரிக்கட் இரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தியாக அமைகிறது.