பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டி 2014!

-டீன் பைரூஸ்-
DSC00182காத்தான்குடி:காத்தான்குடி பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டி (03.032014. செவ்வாய்க்கிழமை) காத்தான்குடி (தேசிய பாடசாலை) மைதானத்தில் பிரதேச கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ்.எஸ்எம்.எம்.சுபைர்.BA(Hons) தலைமையில் நடைபெற்றது.
மேற்படி விழாவுக்கு பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் கௌரவ அல்ஹாஜ; எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்MA/MP அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அதிகளாக வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எம்.அஹமட்லெப்பை(SLEAS),கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் மு.பா.முகம்மது சிப்லி B.Sc(Eng),பிரதி கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ.mm.இஸ்மாலெப்பை SLEAS ,மற்றும் ஜனாப்.MHM.நஸீர்.(ADE)physical ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இன்றைய நிகழ்வில் 30 பாடசாலைகள் பங்குபற்றி இருந்தன.பல நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகளில் அணிநடை, உடற்பயிற்சி,மற்றும் ஓட்டப் போட்டிகள் என்பன மிகவும் நிறப்பாக இடம் பெற்றன.
மேலும் அணிநடையில் 10 பாடசாலைகலும்,உடற் பயிற்ச்சியில் 07 பாடசாலைகளும் பங்கு பற்ற

உடற்பயிற்சி போட்டியில் முதலாம் இடத்தினை……
காங்கயனோடை அல்-அக்ஷா வித்தியாலயம் தட்டிக் கொண்டது.
அணிநடை போட்டியில் முதலாம் இடத்தினை………
காத்தான்குடி மட்-சுஹதா வித்தியாலயம் பெற்றுக் கொண்டது.

புள்ளிகள் அடிப்படையில்…………..
முதலாம் இடம்: காத்தான்குடி மத்தியமஹா வித்தியாலய (தேசிய பாடசாலை)
இரண்டாம் இடம். காத்தான்குடி மீராபாலிகா வித்தியாலயம்.
மூன்றாம் இடம். புனச்சிமுனை இக்றா வித்தியாலயம்.

அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை)க்கான வெற்றிக் கேடயம் மேற்படி விழாவின் பிரதம அதிதி பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் கௌரவ அல்ஹாஜ.; எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்MA/MP அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

DSC00116

DSC00107DSC00100DSC00121DSC00126DSC00158 DSC00182DSC00173DSC00159DSC00161

Published by

Leave a comment