மேர்புர்: ஆசியக் கிண்ணப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் தெரிவுசெய்யப்பட்டிருப்பது குறிப்பாக இலங்கை கிரிக்கட் இரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தியாக அமைகிறது.
இலங்கை அணி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. எனினும் இன்று இடம்பெற்ற பாகிஸ்தான்-பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான விறுவிறுப்பான போட்டியின் முடிவின் பின்னர் பாகிஸ்தான் இலங்கையை எதிர்த்து இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றிருக்கிறது.
ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி வரலாற்றில் இதற்கு முன்னர் இலங்கையும் பாகிஸ்தானும் 1986 மற்றும் 2000ம் ஆண்டில் மோதி இருந்தன. இதில் 1986ல் இலங்கையும், 2000ம் ஆண்டில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றிருந்தன.
பதினான்கு வருடங்களின் பின்னர் மற்றுமொரு ஆசியக்கிண்ண இறுதிப்போட்டியில் மீண்டும் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்வது குறிப்பாக இலங்கை கிரிக்கட் இரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தியாக அமையும் என்பது நிச்சயமானதே.
Published by
![Pakistan-vs-srilanka-2nd-T20-match-410x250[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/10/pakistan-vs-srilanka-2nd-t20-match-410x25011.jpg?w=150&h=91)
Leave a comment