காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் இன்று இரவு சுமார் 8:30 மணியளவில் மின்சாரத் தடை ஏற்பட்டதால், இறுதி நேரத்தில் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருந்த பாகிஸ்தான்-பங்களாதேஷ் போட்டியை தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்த கிரிக்கட் இரசிகர்கள் மன உளைச்சலுக்குள் ஆளானார்கள்.
சஹிட் அப்ரி களத்தில் நின்று கலக்கிக்கொண்டிருக்கும் ஓர் அரிய சந்தர்ப்பத்தில் இம் மின்தடை காத்தான்குடியில் இடம்பெற்றதால், குறிப்பாக பாகிஸ்தான் கிரிக்கட் இரசிகர்கள் பதறியடித்து ஜெனரேட்டர்கள் மூலமாக போட்டியைக் காண அதிக பிரயத்தனம் எடுத்தனர்.
மின்சாரம் மீண்டும் கிடைக்கப்பெற்றபோது போட்டி நிறைவடைந்திருந்ததால் அதிகமான கிரிக்கட் இரசிகர்கள் அதிருப்தியில் இருந்ததைக் காணமுடிந்தது.
Published by

Leave a comment