‘அனைத்து சவுதி மக்களும் சவுதி அரேபியாவைக் காக்க முன்வர வேண்டும்’

grand-muftiஅஷ்செய்ஹ் அப்துல் அஸீஸ் முப்தி வேண்டுகோள்!

– MJ

றியாத்: ‘சவுதி மக்கள் அனைவரும் சவுதி அரேபியாவை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்ற முன்வரவேண்டும்’ என சவுதி அரேபியாவின் சிரேஷ்ட முப்தியான அஷ்செய்ஹ் அப்துல் அஸீஸ் அவரச வேண்டுகோளை சவுதி மக்களுக்கு விடுத்துள்ளார்.

‘சவுதி நபர்கள் தங்களது உள்ளுர் அமைப்புக்களின் தலைமைகளுக்குக் கட்டுப்பட்டு, ஒத்துழைத்து நடப்பதுடன், இஸ்லாத்தை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க சவுதி அரேபியாவுக்காக ஒரு அணி திரளவேண்டும்’ எனவும் இந்த வேண்டுகோளை விடுத்திருக்கின்றார்.

தற்பொழுது உதயம் பெற்றுள்ள ‘இசிஸ்’ அமைப்பிடமிருந்து சில அச்சுறுத்தல்கள் சவுதி அரேபியாவுக்கு வந்திருக்கலாம் எனவும், இதன் காரணமாகவே சவுதி அரேபியாவின் பாதுகாப்பு பற்றி சிரேஷ்ட முப்தியின் வேண்டுகோள் அமையலாம் எனவும் இதன் மூலம் சந்தேகிக்கப்படுகிறது.

Published by

Leave a comment