சவுதி அரேபியாவின் வடக்கு எல்லை தீவிர பாதுகாப்பில்..

saudi– MJ

றியாத்: தற்பொழுது ஈராக்கில் ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சியும், ‘ஹலீபத்’ பிரகடனமும் அரபு நாடுகளை அச்சமடையச் செய்திருக்கின்றன. குறிப்பாக சவுதி அரேபியா, ‘இஸிஸ்’ அமைப்பு விவகாரத்தில் அச்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

இதன் முதற்கட்டமாக சவுதி அரேபியா-ஈராக் எல்லையை இறுக்கப்படுத்தி, தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது சவுதி. சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் சூறா சபைக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்ததன் பின்னர் சவுதி அரேபியா-ஈராக் எல்லை தற்பொழுது பலத்த பாதுகாப்பில் இருந்து வருகிறது.

‘நாட்டையும் இஸ்லாத்தையும் ஓரணியில் நின்று பாதுகாக்க சவுதி மக்கள் அணி திரள வேண்டும்’ என்பதாக சவுதி அரேபியாவின் சிரேஷ்ட முப்தி அஷ்செய்ஹ் அப்துல் அஸீஸ் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

saudi

Published by

One response to “சவுதி அரேபியாவின் வடக்கு எல்லை தீவிர பாதுகாப்பில்..”

  1. இவர்கள் வளர்த்தவர்கள்தான் இந்த isis சும்மா உலகிற்கு காட்ட எல்லையை பலப்படுத்றார்கள்!

Leave a comment