Category: Your Kattankudy
-
‘புனித ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்’- அ.இ.ஜ.உ
– பழுலுல்லாஹ் பர்ஹான் ஹிஜ்ரி 26.08.1435 கொழும்பு: ஆயிரம் மாதங்களை விடவும் சிறந்த இரவைக் கொண்ட மாதமே புனித ரமழான் மாதமாகும். இதில் அல்லாஹ் அல்-குர்ஆனை இறக்கிவைத்ததன் மூலம் இதனை சிறப்புப்படுத்தியுள்ளான். இது துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். மேலும் இது முஸ்லிம்களாகிய நாம் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் உலமாக்களின் வழிகாட்டலோடும் அதிகமாக நல்லமல்களை நிறைவேற்றும் மாதமாகும்.
-
சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக உதவி கோரல்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: புதிய காத்தான்குடி இல 07, டெலிகொம் வீதியில் வசிக்கும் கலந்தர் லெவ்வை முஹம்மட் பஸீர் என்பவர் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். இவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
-
றமழான் மாதத்தில் -அல்-மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாவட்ட மட்டத்தில் ஆண்களுக்கான புனித அல் குர்ஆன் மனனப் போட்டி – வெற்றி பெறுவபர்களுக்கு பெறுமதிவாய்ந்த பரிசுகள்!!
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அல்-மனார் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அல் குர்ஆன் அருளப்பட்ட மாதமான புனித றமழான் மாதத்தில் மாவட்ட மட்டத்தில் ஆண்களுக்கான புனித அல் குர்ஆன் மனனப் போட்டிகளை 3 பிரிவுகளாக நடாத்த திட்டமிட்டுள்ளது.
-
காத்தான்குடியைச் சேர்ந்த அஹ்மத் மாஸின் எனும் மாணவர் சவூதி அரேபியாவில் உயர்தரப்பரிட்சையில் முதலிடம் பெற்று சித்தி
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியைச் சேர்ந்த ஏ.ஏ அஹ்மத் மாஸின் எனும் மாணவர் சவூதி அரேபியாவில் உயர்தரப்பரிட்சையில் முதலிடம் பெற்று சித்தியடைந்துள்ளார். இவர் தனது ஆரம்பக்கல்வியை சவூதி அரேபியாவிலுள்ள கமீஸ் முஸைதில் அமைந்துள்ள அஸீர் சர்வதேசப் பாடசாலையில் ஆங்கில மொழி மூலம் ஆறு வருடங்கள் கற்ற பின் மட்டக்களப்பிலுள்ள ஈஸ்டன் கல்லூரியல் ஒரு வருடம் ஆங்கிலமொழி மூலம் கற்றுள்ளார்.
-
ஆளில்லா விமானம் மூலம் ‘பீஸா’ டெலிவரி – ரஷ்ய நிறுவனத்தின் புதிய திட்டம் வெற்றி!!(காணொளி)
– SHM மொஸ்கோ: ரஸ்யாவின் பீஸா நிறுவனம் ஒன்று ஆளில்லா விமானம் மூலம் பீஸா ஆபகாய டெலிவரி சேவையை தொடங்கி வெற்றி பெற்றுள்ளது.ரஷ்யாவின் சைக்டைவர் பகுதியில் ‘டோடோ பீஸா’ நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வர்த்தக ரீதியான தாரக மந்திரமே 60 நிமிடங்களுக்குள் பீஸா டெலிவரி என்பதுதான். இதனால் அங்கு நம்பர் 1 நிறுவனமாக விளங்கி வருகின்றது.
-
ஃபர்தாவுக்கு தடை விதித்த இராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலய அதிபரின் நடடிக்கை தோல்வி!
கொழும்பு: முஸ்லிம் மாணவியர் மற்றும் அவர்களின் தாய்மார்கள் தொடர்பில் இராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலய அதிபர் விதித்திருந்த ஃபர்தாவுக்கான தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலயத்தில் சிங்கள மொழி மூலமாக ஏராளமான தமிழ், முஸ்லிம் மாணவிகளும் கல்வியைத் தொடர்கின்றனர்.
-
‘தலைமைத்துவப் பயிற்சி எனும் போர்வையில் பொதுபல சேனா ஏற்பாடு செய்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்வை உடனடியாக தடுத்து நிறுத்தவும்’
கொழும்பு: நாடு தற்பொழுது இருக்கும் நிர்க்கதியான நிலையில், கொழும்பில் தலைமைத்துவப் பயிற்சி எனும் போர்வையில் பொதுபல சேனா ஏற்பாடு செய்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்வை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
ரமழானை வரவேற்கும் இங்கிலாந்து ‘சுப்பர் மார்க்கட்ஸ்’!
– MJ லண்டன்: சர்வதேச சுப்பர் மார்க்கட் நிறுவனமான டெஸ்கோ (TESCO), இங்கிலாந்தில் முதன்மையான சுப்பர் மார்க்கட்டுக்களில் ஒன்றாக திகழ்கின்றது. சாதாரண மக்கள் அத்தியவசிய உணவுப் பொருட்களை மலிவு விலைகளில் இந்நிறுவனத்தில் பெற்றுக்கொள்ள முடிகிறது.
-
இன்று பிறை தென்படாததால் புனித ரமழான் நோன்பு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம் – சவூதி
– MJ றியாத்: இன்று 27-06-2014 வெள்ளிக்கிழமை மாலை ரமழான் மாதத்துக்கான பிறை சவுதி அரேபியாவில் தென்படாததால், எதிர்வரும் 29-06-2014 ஞாயிற்றுக்கிழமை புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகிறது என சவுதி அரேபிய சுப்ரீம் கோர்ட் சற்று முன்னர் அறிவித்துள்ளது.
-
11,000 பேர் பங்கேற்கும் நல்லிணக்க பாதயாத்திரை கொழும்பில் இன்று!
கொழும்பு: இனங்களுக்கிடையில் நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் பொலிஸ் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள நல்லிணக்க பாதயாத்திரை இன்று (28) கொழும்பில் இடம்பெறுகிறது. இதில் பெளத்த பிக்குமார், முஸ்லிம், இந்து, கத்தோலிக்க மதத் தலைவர்கள் ஆயிரம் பேரும் சுமார்10,000 பொதுமக்களும் கலந்துகொள்ள இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
-
அளுத்கம கலவரம்: வீடுகள், வர்த்தக நிலையங்களை புனரமைப்பதில் 700 இராணுவ வீரர்கள்
கொழும்பு: அளுத்கம. தர்காநகர் மற்றும் பேருவளை பகுதிகளில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தினால் தீவைக்கப்பட்ட சேதமாக்கப்பட்ட வீடுகளும் மற்றும் வர்த்தக நிலையங்களை புனரமைக்கும் பணிகள் நேற்று முதல் ஆரம்பமானது.
-
1983ல் தமிழ் சமூகம் விட்ட தவறுகளை இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகமும் விட்டுவிடக் கூடாது. வடக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. நீதியரசர். சி.வி.விக்னேஷ்வரன்
– PMGG ஊடகப்பிரிவு யாழ்: வடக்கு மாகாண சபையின் 11வது அமர்வு இன்று 26.06.2014 வியாழக்கிழமை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை பேரவைக் கட்டிடத்தில் அவைத் தலைவர் கௌரவ சீ.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.