Category: Your Kattankudy
-
‘ஜேவிபி அலுவலகங்கள் மீது தாக்குதல்’ – கஃபே
மொனராகல: ஊவா மாகாண தேர்தல் பிரச்சார வேளையில் இன்று மொனராகல மாவட்டத்தில் ஜேவிபி கட்சியின் 4 அலுவலகங்கள் இலக்க தகடற்ற வாகனங்களில் வந்தவர்களால் தாக்கப்பட்டதாக கஃபே எனப்படும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
அவசரமாகத் தரையிறங்கிய மலேசியன் விமானம்!
– SHM கோலாலம்பூர்: ஏற்கனவே இரண்டு விமானங்களையும், அதில் பயணம் செய்த 525 பேரை முழுதாக பறி கொடுத்த நிலையில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஹைதராபாத்துக்கு செல்லவிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது.
-
இணையத்தள லொட்டரியும் ஏமாந்த இந்தியப் பெண்ணும்!
மும்பை: மும்பையை சேர்ந்த பெண் ஒருவருக்கு இங்கிலாந்து லொட்டரியில் ரூ.3.5 கோடி பரிசு விழுந்திருப்பதாகக் கூறி அவரிடம் ரூ.11.5 லட்சம் பணம் பறித்த நைஜீரியாவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பிரிட்டிஷ் தொண்டு ஊழியர் இஸ்லாமிய தேசப்படையால் சிரச்சேதம்: பின்னணியில் அமெரிக்கா?
லண்டன்: சிரியாவில் சுமார் 18 மாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட பிரிட்டிஷ் தொண்டு ஊழியர் டேவிட் ஹேய்ன்ஸை, இஸ்லாமிய அரசு படையினர் சிரச்சேதம் செய்வதைப் போல் காட்டும் வீடியோவை அந்த அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.
-
காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2015ம் ஆண்டு புதிய கல்வியாண்டிற்கு புதிய மாணவர் அனுமதி
– பழுலுல்லாஹ் பர்ஹான் காலி: இலங்கையில் தென் மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்கான மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவு, அல்குர்ஆன் மனனப் பிரிவு என்பவற்றின் முதலாம் ஆண்டிற்கு புதிதாக மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) தெரிவித்தார்.
-
குருக்கள்மடம்: அடையளப்படுத்தப்பட்ட இடம் தொடர்பில் கருத்து முரண்பாடு காணப்பட்டதால் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய நிபுணர் குழு பொலீசாருக்கு அறிவுறுத்தி கொழும்பு திரும்பியது
– வாரஉரைகல் குருக்கள்மடம்: கடந்த மாதம் தோண்டப்படவிருந்த மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குருக்கள்மடம் எனுமிடத்தில் அமைந்துள்ளதாகக் கூறப்படும் காத்தான்குடி முஸ்லிம்களின் புதைகுழிப் பிரதேசத்தைப் பார்வையிடுவதற்காக டாக்டர். அஜித் தென்னக்கோன் தலைமையில் பத்து சட்ட வைத்திய நிபுணர்களைக் கொண்ட குழுவொன்று இன்று (13.09.2014) சனக்கிழமை காலை 08:30 மணிக்கு குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்தது.
-
‘அணுகுண்டுகளைவிட போதைவஸ்த்துக்கள் ஆபத்தானது’- சவுதி சிரேஷ்ட முஃப்தி
– MJ றியாத்: அணுகுண்டுகளைவிட போதைவஸ்த்துக்கள் பயங்கர ஆபத்துக்களை விளைவிக்கக்கூடியவை என சவுதி அரேபியாவின் சிரேஷ்ட முஃப்தியும், சிரேஷ்ட அறிஞர்கள் கவுன்ஸிலின் தலைவருமான அப்துல் அஸீஸ் அஸ்ஷெய்ஹ் எச்சரித்துள்ளார். சவுதி வானொலி நிகழ்ச்சி ஒன்றிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார்.
-
‘இஸிஸ் இயக்கத்தில் 30,000 பேர் இருக்கலாம்’ – சி.ஐ.ஏ.
– SHM வாஷிங்டன்: ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் பிரதேசங்களை இணைத்து இஸ்லாமிய தேசமாக பிரகடணப்படுத்தியுள்ள , உலகை அதிர வைத்துக் கொண்டிருக்கும் இஸிஸ் இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை தாங்கள் கணக்கிட்டிருந்ததைவிட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
-
வல்லரசு நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை இழக்கிறது அமெரிக்கா!
– AF-90 லண்டன்: உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் பல ஆண்டுகளாக கோளாட்சி முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா தான். ஆனால் இப்போது உயர் நிலையை கூடிய விரைவில் அமெரிக்கா இழக்கும் என டாச்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது.உண்மையில் உலக பொருளாதாரம் நிலையற்ற தன்மையில் தான் உள்ளது, குறிப்பாக வல்லரசு நாடுகளின் நிலை படு மோசமாக உள்ளது.
-
ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் புதிய தடைகள்: பதிலடி கொடுக்க ரஷ்யாவும் தயார்!
லண்டன்: உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா ஆதரவளித்துவரும் விவகாரம் தொடர்பாக ரஷ்யாவின் பெரிய வங்கிகள், எரிசக்தி நிறுவனங்கள், பாதுகாப்பு உபகரண நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க அரசு தடைகளை விதித்துள்ளது.
-
இன, மத வேறுபாடின்றி பாதிக்கப்பட்டோருக்கு அடைக்கலம் கொடுக்கும் காஷ்மீர் ஜூம்ஆ பள்ளிவாயல்
– AF-90 ஸ்ரீநகர்: வெள்ளத்தின் நடுவே அனைத்து மதத்தவர்களுக்கும் இருப்பிடமும் உணவும் அளித்து மத ஒற்றுமைக்கு சான்றாக விளங்குகிறது ஜம்மு காஷ்மீரிலுள்ள ஜூம்ஆ மஸ்ஜித். காஷ்மீரில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. பல ஆயிரம் மக்கள் உடமைகளை இழந்து வெள்ளத்தின் நடுவே தத்தளித்து வருகின்றனர்.
-
குறுக்கள்மட மனித புதைகுழி இருக்கும் இடத்தை பார்வையிட பத்து பேர் கொண்ட ஓர் நிபுணர் குழுவொன்று நாளை வருகை
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கடந்த மாதம் தோண்டப்படவிருந்த குறுக்கள்மட மனித புதைகுழி சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரி வருகை தராமையினால் அது நவம்பர் மாதம் 24ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.