றியாத்: அணுகுண்டுகளைவிட போதைவஸ்த்துக்கள் பயங்கர ஆபத்துக்களை விளைவிக்கக்கூடியவை என சவுதி அரேபியாவின் சிரேஷ்ட முஃப்தியும், சிரேஷ்ட அறிஞர்கள் கவுன்ஸிலின் தலைவருமான அப்துல் அஸீஸ் அஸ்ஷெய்ஹ் எச்சரித்துள்ளார். சவுதி வானொலி நிகழ்ச்சி ஒன்றிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார்.
அண்மைக்காலமாக சவுதி அரேபியாவுக்குள் போதைவஸ்த்துப் பொருட்களை பல வகைகளிலும் கடத்தி வருவதில் சிலர் அதிகப் பிரயத்தனம் எடுத்து வருகின்றனர். அவர்களுள் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு தண்டணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இன்னும் பலர் சிறைகளில் தண்டணை அனுபவித்து வருகின்றனர்.
தன்னைத் தானே அழித்துக்கொள்வது, தனது செயற்பாடுகள் மூலமாக பிறருக்கு ஆபத்துக்களை ஏற்படுத்துவது இஸ்லாத்தில் குற்றமான செயல். போதைப் பொருட்கள் இஸ்லாத்தில் ஒழிக்கப்பட்டவை. போதைப் பொருட்களைக் கடத்துதல், அதற்கு உதவி புரிதல், விற்றல், வாங்கல் அனைத்தும் தண்டணைக்குரிய குற்றமே எனவும் முஃப்தி அப்துல் அஸீஸ் எச்சரித்தார்.
போதைவஸ்த்து குற்றத்திற்காக இதுவரை 1197 பேர் சட்டரீதியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 456 பேர் சவுதிஅரேபியர்கள். ஏனைய 741 பேர்களும் ஏனைய 35 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் என சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Published by

Leave a comment