லண்டன்: உலக வல்லரசு நாடுகளின் பட்டியலில் பல ஆண்டுகளாக கோளாட்சி முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா தான். ஆனால் இப்போது உயர் நிலையை கூடிய விரைவில் அமெரிக்கா இழக்கும் என டாச்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது.உண்மையில் உலக பொருளாதாரம் நிலையற்ற தன்மையில் தான் உள்ளது, குறிப்பாக வல்லரசு நாடுகளின் நிலை படு மோசமாக உள்ளது.
வராலாற்றில் அலெக்சாண்டர், ரோம் மற்றும் பிரிட்டன் நாடுகளின் சாம்ராஜ்யம் சரிந்ததை போல இன்றைய நவீன வரலாற்றில் அமெரிக்காவின் சாம்ராஜியமும் கவிழ்கிறது. வல்லரசு நாடு என்ற போர்வையில் அமெரிக்கா செய்த அட்டூழியங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. இதற்கு கடந்த 20 வருடங்களிள் நடந்த உள்நாட்டு போர்கள் சாட்சி.
வல்லரசு நாடுகள் பட்டியலில் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா தொடர்ந்து தனது வலிமையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வந்தது. இதே தருணத்தில் அமைதியாக முன்னேறி வந்த சீனா தற்போது அமெரிக்காவை பிடிக்க போகிறது.
மேலும் சீனா தற்போது அமெரிக்காவை விட மின்கொள்முதலை அதிகப்படியாக செய்கிறது. இதனால் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த 20 வருடங்களில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி சுமார் 20 சதவீதம் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment