வாஷிங்டன்: ஈராக், சிரியா ஆகிய நாடுகளின் பிரதேசங்களை இணைத்து இஸ்லாமிய தேசமாக பிரகடணப்படுத்தியுள்ள , உலகை அதிர வைத்துக் கொண்டிருக்கும் இஸிஸ் இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை தாங்கள் கணக்கிட்டிருந்ததைவிட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
ஈராக், சிரியாவில் பெரும் பகுதியைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசமாக பிரகடனம் செய்துள்ளது இஸிஸ் இயக்கம். இது ஈராக், சிரியாவுடன் மட்டும் நிற்காமல் இதர நாடுகளுக்கும் வேகமாக விரிவடையும் அபாயம் இருக்கிறது.
இதனால் இந்த இயக்கத்தை ஒடுக்குவதற்கு அமெரிக்கா தலைமையில் சர்வதேச நாடுகள் மும்முரமாக களம் இறங்கியுள்ளன. ஏற்கெனவே அமெரிக்கா விமானங்கள் ஈராக்கில் இஸிஸ் நிலைகள் மீது தாக்குதல் நடத்துகின்றன. சிரியாவிலும் தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. செய்தித் தொடர்பாளர் இஸிஸ். இயக்கம் பற்றி சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அவரது தகவலின்படி, இவ்இயக்கத்தில் மொத்தமே 10 ஆயிரம் பேர்தான் இருப்பார்கள் என்று கருதப்பட்டது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
அதாவது 20 ஆயிரம் முதல் 31,500 பேர் வரை அந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக இருக்கலாம்.குறிப்பாக கடந்த ஜூலை மாதத்தில் இருந்து தீவிர ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை இந்த இயக்கம் மேற்கொண்டிருக்கிறது. தாங்கள் கைப்பற்றும் நகரங்களில் உள்ள சிறைகளில் இருக்கும் சுன்னி பிரிவினரையும் அப்படியே இந்த இயக்கம் இணைத்துக் கொள்கிறது. இந்த இயக்கத்தில் உள்ள 15 ஆயிரம் பேர் வெளிநாட்டவர். இதில் மேற்குலக நாட்டவர் 2 ஆயிரம் பேர் என்கிறது சி.ஐ.ஏ.
Published by
![iraq-ISIS-jihad_2940452b[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/07/iraq-isis-jihad_2940452b1.jpg?w=150&h=93)
Leave a comment