காத்தான்குடி: கடந்த மாதம் தோண்டப்படவிருந்த குறுக்கள்மட மனித புதைகுழி சிரேஷ்ட சட்ட வைத்திய அதிகாரி வருகை தராமையினால் அது நவம்பர் மாதம் 24ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால் நவம்பர் மாதம் அதிகமான மழை காலம் என்பதால் இதனை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் காணமல் போனோர் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவருடன் பேசி சென்ற வாரம் பயங்கரவாத புலனாய்வு தலைவருடனான ஓர் சந்திப்பை ஏட்படுத்தி, அதனைத்தொடர்ந்து களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,பொலிஸ் மேலதிகாரிகள்,சட்ட வைத்திய அதிகாரிகள்குழு,அதனோடு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனான சந்திப்பொன்றை நடாத்தியதனூடாக நாளை மறுதினம் அதாவது 13.09.2014 சனிக்கிழமை அன்று பத்து பேர் கொண்ட ஓர் நிபுணர் குழுவொன்று குறுக்கள்மட மனித புதைகுழி இருக்கும் இடத்தை பார்வையிட வருகை தர இருக்கின்றனர்.
இவர்கள் இதனை எவ்வாறு தோண்டுவது,எவ்வளவு காலம் எடுக்கும்,இதனோடு சம்பந்தப்பட்ட வேறு எந்தெந்த திணைக்களங்கள் சம்பந்தப்படவேண்டும் என்ற விடயங்கள் ஆராயப்பட்டு இம்மாத இறுதிக்குள் அதனை தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான சகலவிதமான முன்னெடுப்புகளும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாரூக் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Published by

Leave a comment