Category: Your Kattankudy
-
இலவசமாக ஹஜ் செய்வற்கான வாய்ப்பை வழங்கிய அல்மனார்
– அல்-மனார் ஊடகப்பிரிவு காத்தான்குடி: அல் மனார் நிறுவனம் அதன் ஊழியர்களை கௌரவப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் முற்றிலும் இலவசமாக ஹஜ் செய்வற்கான வாய்ப்பொன்றினை தேசிய கல்விக்கான பிரதிப்பணிப்பாளர் எம்.ஐ.எம். அன்வர் ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி தெரிவித்தார்.
-
அட்டாளைச்சேனை பிரதேசம் கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் முன்னிலையில்
– ஹஸன் அகமட் அட்டாளைச்சேனை: கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை (19) மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச வைத்தியம், சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு, சமூக சேவைகள், கூட்டுறவு அபிவிருத்தி, விளையாட்டுத் துறை, தொழிற் பயிற்சிக் கல்வியமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
-
கட்டுக்குருந்த பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் மோதல்!
களுத்துறை: தென்னிலங்கையின் களுத்துறை மாவட்டம் கட்டுக்குருந்த பிரதேசத்தில் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
-
அரிய வாய்ப்பு: அஜ்மானில் இன்று முதல் 10 நாட்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை முகாம்!
– AF- 90 அஜ்மான்: அஜ்மான் அல் ரஹா மருத்துவ நிலையத்தில் இன்று (21.09.2014) முதல் 30.09.2014 வரை பத்து நாட்கள் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற இருக்கிறது. இம்மருத்துவ ஆலோசனை முகாமில் டொக்டர் சலீம் ஜமாலுதீன் அவர்கள் இதயநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்குகிறார்.
-
ஊவா தேர்தல்: ஆளும் கட்சியின் ஆதரவுகள் கணிசமான அளவு வீழ்ச்சி!
கொழும்பு: நடைபெற்று முடிந்த ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. எனுனும் ஆளுங்கட்சியின் ஆதரவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அத்துடன் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கான ஆதரவும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
-
தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகள்: பதுளை மாவட்டம்
Name of the Party/Independent Group No. of Votes Received Percentage % United People’s Freedom Alliance 8,810 46.52% United National Party 7,274 38.41% People’s Liberation Front 2,087 11.02% Democratic Party 517 2.73% National Freedom Front 159 0.84% Democratic Unity Alliance 62 0.33%…
-
உலக அமைதி தினம் – செப்டெம்பர் 21
– அப்துல் அஸீஸ், மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரி உலக அமைதி தினம் என்றால் என்ன என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். இதற்குக் காரணம் அமைதி என்பதன் அர்த்தம் சிலருக்குப் புரியாமல் இருப்பதாகும். உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளுக்கிடையே மோதல் ஏற்படுவதை முற்றிலும் தடுக்கும் விதத்திலும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1981ம் ஆண்டு முதன் முதலாக உலக அமைதி தினம் கொண்டு வரப்பட்டது. செப்டம்பர் 21ம் திகதி உலக அமைதி தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
-
மன்னார்- மறிச்சிக்கட்டி காணி விவகாரம் தொடர்பில் விஷேட சந்திப்பு
– ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மன்னார்: இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மன்னார்- மறிச்சிக்கட்டி, மரைக்கார்தீவு முஸ்லிம் மக்களின் காணி விவகாரம் தொடர்பில் விஷேட சந்திப்பு ஒன்று இன்று மாலை இடம்பெற்றது.
-
ஊவா மாகாணத் தேர்தலில் 60 வீதத்துக்கும் அதிகமான வாக்குப் பதிவு
பதுளை: இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊவா மாகாண சபைக்கான தேர்தல் வாக்களிப்பில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 60 வீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
-
ஆண்களுடன் சேர்ந்து ஆடியதற்காக 3 இளம் பெண்களுக்கு கசையடி: ஈரான் நடவடிக்கை
– AF-90 தெஹ்ரான்: வீடியோ காட்சி ஒன்றில் தோன்றி ஆடியதற்காக ஈரானின் 3 இளம் பெண்கள் உட்பட ஆறுபேருக்கு 91 முறை கசையடி அளிக்கவும், அதிகபட்சம் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கவும் ஈரான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பர்ரல் வில்லியம்சின் வீடியோ அல்பம் ஒன்றில் பர்தா அணியாத பெண்கள் மூவர் தெருவிலும், வீட்டு மேலும் நின்றபடி ஆடுவது போன்ற காட்சி இருந்தது.
-
உயிரிழந்த இளைஞனின் உயிருக்கு காரணமாக இருந்த வான் சாரதியை உடனடியாக கைது செய்ய வேண்டுமென கூறி பொது மக்கள் ஆர்ப்பாட்டம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பிரதேசத்தில் 20-09-2014 இன்று சனிக்கிழமை அப்பிரதேச பொது மக்கள் வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
‘இஸ்லாமிய தேச’த்தை விட்டு ஆயிரக்கணக்கான சிரிய குர்து மக்கள் துருக்கியில் தஞ்சம்!
– AF-90 இஸ்தான்புல்: சிரியாவில் ஐ.எஸ். அறிவித்திருக்கும் இஸ்லாமிய தேசம் என்ற பகுதியை விட்டு வெளியேறி ஆயிரக்கணக்கான குர்து இன மக்கள் துருக்கியில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஈராக், சிரியாவில் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி இஸ்லாமிய தேசம் என்ற தனிநாட்டை ஐ.எஸ். இயக்கத்தினர் பிரகடனம் செய்துள்ளன.