ஆண்களுடன் சேர்ந்து ஆடியதற்காக 3 இளம் பெண்களுக்கு கசையடி: ஈரான் நடவடிக்கை

iran– AF-90

தெஹ்ரான்: வீடியோ காட்சி ஒன்றில் தோன்றி ஆடியதற்காக ஈரானின் 3 இளம் பெண்கள் உட்பட ஆறுபேருக்கு 91 முறை கசையடி அளிக்கவும், அதிகபட்சம் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கவும் ஈரான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பர்ரல் வில்லியம்சின் வீடியோ அல்பம் ஒன்றில் பர்தா அணியாத பெண்கள் மூவர் தெருவிலும்,  வீட்டு மேலும் நின்றபடி ஆடுவது போன்ற காட்சி இருந்தது.

ஈரான் அரசுக்கு இந்த வீடியோ குறித்த விவரம் கடந்த மே மாதம் தெரியவந்தது. ஈரானின் சட்டப்படி பிற பாலினத்தவருடன் சேர்ந்து நடனமாடுவதும், பெண்கள் முகத்தில் திரை போட்டு மறைத்துக்கொள்ளாமல் வெளியே முகத்தை காண்பித்ததும் குற்றமாகும்.

iran

எனவே வீடியோவில் காட்சியளித்த மூன்று பெண்களுடன் ஆடிய மூன்று ஆண்கள் என மொத்தம் ஆறுபேர் ஈரான் பொலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஐந்து பேருக்கு 6 மாத சிறை தண்டனையும், 91 கசையடியும், ஒருவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் 91 கசையடியும் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.

iran (2)

Published by

Leave a comment