உயிரிழந்த இளைஞனின் உயிருக்கு காரணமாக இருந்த வான் சாரதியை உடனடியாக கைது செய்ய வேண்டுமென கூறி பொது மக்கள் ஆர்ப்பாட்டம்

???????????????????????????????– பழுலுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பிரதேசத்தில் 20-09-2014 இன்று சனிக்கிழமை அப்பிரதேச பொது மக்கள் வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 15 திகதி திங்கட்கிழமை கிரான்குளம் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்திற்கும் அதனால் உயிரிழந்த 22வயது இளைஞனின் உயிருக்கும் காரணமாக இருந்த வான் சாரதியை உடனடியாக கைது செய்ய வேண்டுமென கூறியே பொது மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தால் மட்டக்களப்பு –கல்முனை கிரான்குளம் பிரதான வீதியின் போக்குவரத்து சிறிது நேரம் ஸ்தம்பிதம் அடைந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த காத்தான்குடி பொலிசார் நிலமைகளை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்ததுடன் ஸ்தம்பிதம் அடைந்த போக்குவரத்து சேவைகளை வழமை நிலைக்கு கொண்டுவந்தனர்.

kirankulam

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடோர் ஆருயிர் நண்பன் புதை மேட்டில் அன்புத் தோழன் வார்ட்டில் அத்தனைக்கும் காரணமான குற்றவாளி வீட்டிலா? இது தானா நீதி,போன உயிருக்கு பொய்யால் சிருஷ்டித்தது யார் ? நியாயம் எங்கே? நீதி எங்கே? பொலிசாரே,ஊடகமே உண்மையை கூறு வீரகேசரி உண்மையை மக்களுக்கு சொல்,மரத்தில் உதிரும் மனித இலைகளா உயிர்கள் ஊடகமே உண்மை எங்கே? ,ஊடகம் உண்மையை மட்டும் சொல்,நீதி வேண்டும்,நீதி வேண்டும் பொலிசாரே ,ஊடகமே பொறுப்புடன் செயற்படு ,உயிர் போனால் சாரதிக்கு வீடா ? ,சிறைச்சாலையா ? போன்ற பல்வேறு தமிழ் சுலோகங்களை வீதியில் ஏந்திருந்தனர்.

kirankulam

ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர,மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்கர் எஸ்.பி. உபாலி ஜெயசிங்க,கஞவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி.காமினி இஹளவத்த, மட்டக்களப்பு பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.பி.அனுருத்த பண்டார ஹக்மன உட்பட பொலிஸ் உயரதிகாரிகள் ,மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயமூரத்தி முரளிதரனின் இணைபுச் செயலாளர் பொன் ரவீந்திரன் ஆகியோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடமும் ,விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தவரின் குடும்பத்தவர்களிடமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

kirankulam

இதன் போது பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டோர் பொலிஸ் உயரதிகாரிகளிடம் விபத்திற்கு காரணமாக இருந்த வான் சாரதியை உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும்,இவ் விடயத்தில் பிழையான செய்தீயை வெளியிட்ட ஊடகங்கள் மறுப்பு அறிக்கைவிட வேண்டுமெனவும், விபத்தில் உயிரிழந்த இளைஞனின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்கப்படவேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

குறித்த விபத்துக்கு காரணமான சாரதியை கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதுடன் நீதிமன்றத்தினால் சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்தனர்.

எனினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களின்; வேண்டுகோளுக்கினங்க நீதிபதியோடு இவ் விடயம் சம்மந்தமாக பேசி வாகன விபத்திற்கு காரணமாக இருந்த வான் சாரதியை மீண்டும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதாக ஆர்ப்;பாட்டக்காரர்களிடம் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர கூறியதையடுத்தே ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.

இவ் விபத்து கடந்த 15 -09-2014 திகதி திங்கட்கிழமை இரவு 10-15 மணிக்கு கிரான்குளம் சந்தியில் இடம்பெற்றுள்ளதாகவும் சந்தியில் பேசிக்கொண்டு நின்ற இளைஞர்கள் மீது, மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கிச் சென்ற வான் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இதில் கிரான்குளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் ருத்திரநாதன் எனும் 22 வயது இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் அவரின் நண்பர்கள் இருவர் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் 25ம் விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment