இலவசமாக ஹஜ் செய்வற்கான வாய்ப்பை வழங்கிய அல்மனார்

al manar– அல்-மனார் ஊடகப்பிரிவு

காத்தான்குடி: அல் மனார் நிறுவனம் அதன் ஊழியர்களை கௌரவப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் முற்றிலும் இலவசமாக ஹஜ் செய்வற்கான வாய்ப்பொன்றினை தேசிய கல்விக்கான பிரதிப்பணிப்பாளர் எம்.ஐ.எம். அன்வர் ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் செயலாளர் நாயகம் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி தெரிவித்தார்.

அவர் இது விடயமாக மேலும் கூறுகையில், கடந்த எட்டு வருடங்களாக எமது அல் மனார் நிறுவனத்திற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அதிலும் விசேடமாக தேசிய கல்விக்கு தமது முழுப்பங்களிப்புக்களையும் வழங்கிய பிரதிப்பணிப்பாளர் அன்வர் ஆசியருக்கு இத்தகைய பெறும் பேற்றினை அல்லாஹ் என் மூலம் வழங்கியிருப்பதனையிட்டு நானும் மகிழ்ச்சியடைகின்றேன் அல்லாஹ்வைப் புகழ்கின்றேன் அல்ஹம்துலில்லாஹ்.

anver sir

எமது நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு இற்றை வரை பல சவால்களை முகங்கொண்ட போதெல்லாம் அன்வர் ஆசிரியர் எமது செயல்பாடுகளுக்கு பக்கபலமாக இருந்து செயல்பட்டுள்ளார். இன்னும் சில சகோதரர்கள் இதுபோன்ற வாய்ப்புக்களை பெற தகுதியுடைடயவர்களாக காணப்படுகின்றனர். அவர்களுக்கும் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் உதவியுடன் எதிர்வரும் காலங்களில் என்னாலான சகல முயற்சிகளையும் புனித கஃபத்துல்லாஹ்வை தரிசிப்பதற்கு மேற்கொள்ளவுள்ளேன்.

al manar

அல்லாஹ்வின் உதவியுடன் எமது நிறுவனம் ஷரீஆ, தேசியக்கல்வி, சமூக மற்றும் தஃவா துறைகளில் பாரிய முன்னேற்றங்களை கண்டு வரும் நிறுவனமாக மாறியிருப்பதற்கு எமது உத்தியோகத்தர்களின் அயராத உழைப்பு மேன்மையானதாகும். ஆகவே அவர்களை ஊக்கப்படுத்தி, சந்தோசப்படுத்துவது எனது தலையாய கடமைகளில் ஒன்றெனக் கருதுகின்றேன் எனவும் செயலாளர் நாயகம் மும்தாஸ் மதனி குறிப்பிட்டார்.

Published by

Leave a comment