Category: Your Kattankudy
-
பால் மா விளம்பரங்களுக்கு உடன்தடை
கொழும்பு: பால்மா தொடர்பான சகல விளம்பரங்களையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பால்மா தொடர்பான தொலைக்காட்சி, பத்திரிகை மற்றும் வானொலி விளம்பரங்கள் இடைநிறுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
-
மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் யாழிற்கான புகையிரத சேவை பரீட்சார்த்தம்
– FM. பர்ஹான் யாழ்ப்பாணம்: வடக்கின் அபிவிருத்தியின் மற்றுமொரு திட்டமாகவும் 24 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையினை முழுமைப்படுத்தும் வகையிலுமான பரீட்சார்த்த புகையிரத சேவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
-
ஊவா மாகாண தோல்வி அடுத்த வெற்றிக்கான அடித்தளம் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாதவர்கள் இந்த பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுகின்றார்கள்
– கட்டாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா டோஹா: நடை பெற்று முடிந்துள்ள ஊவா மாகாண சபை தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களும், புரிந்து கொள்ள முடியாத கட்சிக்குள் வெளியாகும் கருத்துக்களும் எந்த அளவுக்கு ஒற்றுமையின் பலத்தை காட்டப் போகின்றது என்ற கேள்வியினை எழுப்பியுள்ளது.
-
மட்டு-மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் வரி அறவீடுகள் தொடர்பான கலந்துரையாடல்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஆசிய மன்றத்தின் அனுசரனையில் ஆசிய மன்றத்தினால் உள்ளுராட்சி மன்றங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார ஆளுகை நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் வரி அறவீடுகள் தொடர்பான கலந்துரையாடல் 22-09-2014 திங்கட்கிழமை மட்டக்களப்பு சத்துறுக்கொண்டான் சர்வோதய நிலையத்தில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து கொழும்பு ஊடாக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு 420 ரூபாய் சாதாரண கட்டணத்தில் இ.போ.ச. பஸ் சேவை
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை போக்குவரத்து சபையின் மேற்குப் பிராந்தியத்தின் கம்பஹா மாவட்டத்திலுள்ள வெலிசர டிப்போவும் ஜா – எல டிப்போவும் இணைந்து காத்தான்குடி பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து கொழும்பு ஊடாக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கும் இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பு மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து பொலனறுவை ஊடாக காத்தான்குடிக்கும் இரவு நேரத்தில் விஷேட பஸ் சேவையொன்றை ஆரம்பித்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வெலிசர டிப்போ முகாமையாளர் லக்ஷ்மன் மல்ராஜ் தெரிவித்தார்.
-
காத்தான்குடியிலுள்ள வாவிகளில் பிடிக்கப்படும் மீன்களை உட்கொள்ளக்கூடாது என கூறப்படும் வதந்தியை நம்பவேண்டாம் எனக் கூறி காத்தான்குடி பிரதேச மீனவர்கள் ஆர்பாட்டம்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வாவிகளில் பிடிக்கப்படும் மீன்களை உட்கொள்ளக்கூடாது என வதந்தி பரவி வருவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் வதந்தியை நம்பவேண்டாம் எனவும் கூறி காத்தான்குடி பிரதேச மீனவர்கள் 22-09-2014 இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
புனாணை அணைக்கட்டு பொத்தானை கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொர்பாக ஆராயும் விஷேட கூட்டம் – பொத்தானை கிராமத்தில்
பழுலுல்லாஹ் பர்ஹான் புனாணை: மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புனானை மேற்கு பொத்தானை கிராமத்தில் மீள் குடியேறியுள்ள தமிழ் முஸ்லிம் மக்களுக்கான விஷேட கூட்டமொன்று அண்மையில் புனாணை அணைக்கட்டு பொத்தானை முகைதீன் ஜூம்மா பள்ளிவாயல் வளாகத்தில் பொத்தானை முகைதீன் ஜூம்மா பள்ளிவாயல தலைவர் அகமட் லெப்பை ஹாஜியார் தலைமையில் இடம்பெற்றது.
-
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சமூக சீர்கேடுகள் எனும் தொனிப்பொருளில் பொது மக்களை விழிப்பூட்டும் பொதுக்கூட்டம்
எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சமூக சீர்கேடுகள் எனும் தொனிப்பொருளில் பொது மக்களை விழிப்பூட்டும் பொதுக்கூட்டம் ஒன்று நேற்று காத்தான்குடி இமாம் கொமைனி வீதியிலுள்ள பஞ்ச கர்ம வைத்தியசாலை முன்பாக சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவர் எம்.ஐ எம்.ஹாரிஸ் தலைமையில் இடம்பெற்றது.
-
புத்தளத்தில் 30 வயது இளம் முஸ்லிம் பெண் எரித்துக் கொலை!
புத்தளம்: புத்தளம் வேப்பமடு ரஹ்மான் நகரை சேர்ந்த பெண்ணொருவர் எரித்து கொல்லப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரஹ்மன் நகர் வேப்பமடு 4ம் கட்டை புத்தளம் என்ற விலாசத்தை சேர்ந்த பெண்ணொருவர், தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
-
ஊவா தேர்தல்: அரசாங்கத்திற்கு உண்மையில் வெற்றியா?
கொழும்பு: இலங்கையில் நடந்துமுடிந்த ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ள போதிலும், அக்கட்சியின் வாக்குபலம் வெகுவாகக் குறைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் வாக்குபலம் அதிகரித்துள்ளது.
-
குர்ஆனில் குறைதேட புறப்பட்ட இளம் பெண் வைத்தியர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சந்தர்ப்பம்!
– அ.றஹ்மான் நியுயோர்க்: அமெரிக்காவின் டாக்டர் பட்டம் பெற்ற இளம்வயதுப் பெண் ஒருவர் குர்ஆன் மஜீதை குறை கண்டுபிடிக்கும் நோக்கில் ஆராயத்தலைப்பட்டார். தனது ஆராய்ச்சியில் அதில் குறை கண்டுபிடிப்பதற்காக பெரும் முயற்சிகளையெல்லாம் மேற்கொண்டார். ஆனால், குறை காண விழைந்த அந்த இளம் டாக்டரை திருக்குர்ஆன் தன் வசம் இழுத்துக் கொண்டது.