ஊவா மாகாண தோல்வி அடுத்த வெற்றிக்கான அடித்தளம் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாதவர்கள் இந்த பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுகின்றார்கள்

ELECTION-non-colour[1]– கட்டாரிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா

டோஹா: நடை பெற்று முடிந்துள்ள ஊவா மாகாண சபை தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களும், புரிந்து கொள்ள முடியாத கட்சிக்குள் வெளியாகும் கருத்துக்களும் எந்த அளவுக்கு ஒற்றுமையின் பலத்தை காட்டப் போகின்றது என்ற கேள்வியினை எழுப்பியுள்ளது.

ஊவா மாகாண மாகாணத்தினை பொறுத்த வரையில் ஒட்டு மொத்த முஸ்லிம் வாக்காளர்களின் எண்ணிக்கை 30 ஆயிரம் என்பதாகவே அரசியல் மேடைகளில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலி ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய கருத்து தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

குறிப்பாக பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களை பொருத்த வரையில் அதிகமான வாக்குகள் ஜக்கிய தேசியக் கட்சிக்கே செல்டவது வழமையானதொன்றாகும்.இந்த தேர்தலிலும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி,மற்றும் ஜக்கிய தேசிய கட்சி என்பன கணிசமான வாக்குகளை பெற்றதுடன்,மூன்றாவது சக்தியாக மக்கள் விடுதலை முன்னணி ( ஜே.வி.பி) யும் மாகாண சபைக்குள் புகுந்துள்ளது.

இந்த நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர்களான ரவூப் ஹக்கீம்,றிசாத் பதியுதீன் இணைந்த கூட்டு இம்முறை 6 ஆயிரம் வாக்குகளை பெற்றதுடன்,ஆசனம் எதனையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை.இவ்வாறானதொரு சூழ்நிலைய காணப்படும் வேளையில்,இந்த கூட்டு தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களை காதுகொடுத்து கேட்கும் போது சில தெளிவுகள் எம்மல் எழுகின்றன.

தேர்தல் அறிவிப்பு வெளியானதும்,பல்வேறு பல்துறை அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து இந்த தேர்தலில் முஸ்லிம் பிரதி நிதியினை பெறுதல்,அத்துடன்,தற்போது நாட்டில் ஏற்பட்டுவரும் இனவாத செயற்பாடுகளில் இருந்து முஸ்லிம்களை பாதுகாக்க முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையின் பலம் எவ்வாறு காணப்படுகின்றது.அதற்கு பரீட்ச்சார்த்தமான ஆரம்பமாக இந்த ஊவா தேர்தலை பார்க்க முடியும்.

இந்த தேர்தல் முடிவுகள் ஒரு உண்மையினை தெளிவுபடுத்தியுள்ளது,ஒற்றுமையினை விரும்பும் முஸ்லிம்கள் இன்னும் இருக்கின்றார்கள் அவர்களை நெறிப்படுத்தி வழிநடத்த வேண்டியது,இந்த புதிய கூட்டின் முக்கிய பொறுப்பு என்பதை இல ங்கை முஸ்லிம்கள் வலியுறுத்த வேண்டும்.இது இவ்வாறு இருக்கின்ற போது இந்த ஒற்றுமை தொடர்பில் கட்சிக்குள் இருக்கும் பலரது பகிரங்க விமர்சனங்கள் மக்கள் மத்தியில் கடும் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.ஊவா மாகாண தோல்வி என்பது அடுத்த வெற்றிக்கான அடித்தளம் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாதவர்கள் இந்த பொறுப்பற்ற அறிக்கைகளை பத்திரிகைகளுக்கு முகம் காட்டுவதற்காக வெளியிடுகின்றார்கள்.

கட்சி என்பது கட்டுக் கோப்பான உட்கட்டமைப்பினை கொண்டிருக்க வேண்டும்,கட்சியின் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் சிறுபிள்ளை தனமாக செயற்படுகின்றார்கள் என்றால் அவர்கள் தொடர்பில் உரிய காத்திரமான நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என்பது தலைமைத்துவங்கள்,மற்றும் கட்சியின் போராளிகளுக்கு உரிய தார்மீக கடமையாகும்.

ஊவா மாகாண சபை தேர்தல் முடிந்த கையோடு ஊவா முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான கருத்துக்களை வெளிப்படுத்துவது என்பதும் கேள்விக்குரியான விடயமாகும்.அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம்,றிசாத் பதியுதீன் ஆகியோர் ஒன்றிணைந்து ஊவா மாகாண சபை தேர்தலில் வேட்பாளர்களை ஒரே சின்னத்தில் களமிறக்கினர்.ஆளும்,எதிர்கட்சிகளினது கடும் வேட்டைகளுக்கு மத்தியிலும்,முஸ்லிம்கள் இந்த கூட்டுக்கு வாக்களித்துள்ளனர்.

இதனை ஏன் சாதகமான பார்வையாக நோக்க முடியாமல் உள்ளது என்பதும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும்.இந்த முன்மாதிரி தொடர வேண்டும் என்பதில் இலங்கைக்குள்ளும்,சர்வதேசத்திலும் குரல்கள் ஒலித்துக் கொண்டிருப்பதை நாம் மறந்து செயற்படலாகாது.

ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி தொடர்பில் முஸ்லிம் மக்கள் மக்கள் மத்தியில் காணப்படும் அதிருப்தி நிலையே புதிய கட்சிகளின் உருவாக்கத்திற்கு காரணியாகவும்,தேவையாகவும் அமைந்திருந்தது.இந்த இரு கட்சிகளும் அதனது பயணத்தை வேக வித்தியாசத்தினை அடிப்படையில் முன்னெடுத்துவருகின்றது.
நடந்து முடிந்த தேர்தலை படிக்கள்ளாக கொண்டு எதிர்கால தேர்தல் வியூகங்களை ,விட்டுக் கொடுப்புக்கள்,ஆக்க பூர்வமான கருத்தாடல்கள்,அவசரப்படாத அறிக்கைகள்,தலைமைத்துவத்தின் வழி நடத்தல்களின் கீழ் செய்ய வேண்டிய தேவை தற்போது அதிகரித்துள்ளது.இவ்விடயத்தில் கட்சிகள் அதிக அக்கறை செலுத்துவதன் மூலம் எதிர்காலத்தின் சவால்களை சந்திக்க முடியும்.இந்த சந்திப்பானது உறுதியானதும், இறுதியானதுமான முஸ்லிம்களின் பாதுகாப்பு,இறுப்பு,உரிமை விடயங்களில் ஆதிக்கம் செலுத்தும் பிரதான காரணியாக விளங்க வேண்டும்.

ஜனநாயக ரீதியான கருத்துக்கள் கொண்டவர்கள், உலமாக்கள்,துறை சார்ந்தவர்கள்,கட்சியின் சகல மட்டத்தினதும் பிரதி நிதிகள் கொண்ட ஒரு சபை அமைக்கப்பட்டு இந்த பணியினை முன்னெடுப்பதன் மூலம்,ஊவாவில் கிடைக்காமல் போன மாகாண சபை பிரதி நிதித்துவத்துக்கு பதிலாக பாராளுமன்றப் பிரதி நிதித்துவத்தை அடையும் நேரம் தற்போது ஏற்பட்டுள்ளது என்று நாம் சிந்திப்பது காலத்தின் தேவையாகும்.

Published by

Leave a comment