காத்தான்குடி: சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சமூக சீர்கேடுகள் எனும் தொனிப்பொருளில் பொது மக்களை விழிப்பூட்டும் பொதுக்கூட்டம் ஒன்று நேற்று காத்தான்குடி இமாம் கொமைனி வீதியிலுள்ள பஞ்ச கர்ம வைத்தியசாலை முன்பாக சிவில் பாதுகாப்பு குழுவின் தலைவர் எம்.ஐ எம்.ஹாரிஸ் தலைமையில் இடம்பெற்றது.
165 ஏ சிவில் பாதுகாப்பு குழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் யூ எல் நஸீர்தீன் மனித உரிமைகள் அதிகாரி ஏ எல் அஸீஸ் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யூ .எல்.எம்.என் முபீன், பிஸ்மி குர்ஆன் முன்மாதிரி பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ் எம்.பீ.எம் பிர்தௌஸ் நளீமி, பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர் திருமதி விமலதேவி மற்றும் 165 ஏ பிரவுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி எம் முஜாஹித் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
பின்வரும் விடயங்கள் இங்கே விளக்கமளிக்கப்பட்டன:
ஆண்மிக செயற்பாடுகளில் இளைஞர் யுவதிகளை மேலும் வழி நடாத்தல்.
தொலைபேசி பாவனை தொடர்பாகவும் பெற்றோர் அதனை கண்காணித்தலும் பெற்றோரின் அநாகரிகமான செயற்பாடுகளால் பிள்ளைகள் பாதிப்படைதல்.
கிராம மட்டங்கள் தோரும் போதை வஸ்த்து பாவனையும் அதனைக்கட்டுப்படுத்த பல்வேறு விழிப்பூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.
சந்தேகத்திற்கிடமான அல்லது குற்றமான செயற்பாடுகளை கண்டால் உடனே பொலிசாருக்கு தெரிவித்தல்.
பாடசாலை மட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் தெடர்பான செயலமர்வுகளை நடாத்தல்.
குர்ஆன் மத்ரசாக்கள் மற்றும் பாலர் பாடசாலைகளின் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணித்தல்.
Published by

Leave a comment