காத்தான்குடி: சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிஸ்மி கின்டர்காடன் ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தின நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை பிஸ்மி தலைமையகத்தில் பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். பிர்தௌஸ் (நளீமி) தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சுமார் 72 மாணவ மாணவிகள் கலந்து கொண்டதோடு பிஸ்மி கின்டர்காடன் ஆசிரியைகள் மற்றும் பிஸ்மி குழுமத்தின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இங்கு இஸ்லாமிய கலாசாரத்தை பேணும் சிறுவர் சிறுமிகளின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் பல்வேறு நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
மேலும் சிறுவர்களுக்கான ஒரு காட்டூன் திரைப்படம் திரையிடப்பட்டதோடு சிறுவர் தின பாடலும் சிறுவர்களால் இசைக்கப்பட்டது.
சிறுவர் தின வாழ்த்து அட்டை ஒன்றுக்கு வர்ணம் தீட்டும் விசேட போட்டி நிகழ்ச்சி ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையில் ‘பிஸ்மி குட்டீஸ்’ எனும் சிறப்பு நிகழ்ச்சி இடம்பெற்றது.
இதில் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு பாடல்கள், கதைகள், ஹதீஸ்கள், கிறாஅத் என பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தினர்.
அத்துடன் நிகழ்வின் இறுதியில் கலந்து கொண்ட அனைத்து சிறுவர், சிறுமிகளுக்கும் பரிசில்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
Published by




Leave a comment