உறவுகளைப் பேணி, நட்புக்களைக் காப்போம் – ஹாரூன் (ஸஹ்வி)

Haroon Sahvi– எம்.ரீ.எம். பாரிஸ்

ஓட்டமாவடி: எவ்வருடம் போல இவ்வருடமும் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் எனது இதயம் நிறைந்த ஹஜ் பெருநாள் நல்வாழ்த்தினை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன், அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ் ஹாரூன் (ஸஹ்வி) தனது ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தேவையற்ற களியாட்டங்களைத் தவிர்த்தம் பிற மத அன்பர்களின் உணர்வுகளை மதித்தும் இஸ்லாமிய வட்டத்தை விட்டும் வெளியேறி விடாது இந் நன்நாளினை கொண்டாட வேன்டும் என எல்லோரையும் ஒரு இஸ்லாமிய சகோதரன் என்ற வகையில் கேட்டு கொள்கின்றேன்.

தவிர இப்புனித நாளில் உறவுகளை பேணி, நட்புகளை காத்து மலர்ந்த முகத்தோடு ஒருவருக்கொருவர் ஸலாம் கூறியும் அன்பளிப்புகளை பகிர்ந்தும் மாற்று மத சகோதரர்களிடையே இஸ்லாமியர்களின் நல்ல பண்பாடு மற்றும் வழிமுறைகளை வெளிக்காட்ட இறைவன் வழங்கிய இரு பெருநாட்களில் ஒன்றாக இதைப் பயன்புடுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

மேலும் உழுகிய்யா என்ற பிராணிகளைப் பளியிடும் நமது உயர்ந்த வணக்கத்தைச் செய்யும் போதும், மார்க்கம் காட்டிய வழிமுறையின் அடிப்படையில் மென்மையாகவும் அழகாகவும் நடந்து கொண்டு, சித்திரவதை என்ற விமர்சனங்களையும் முஸ்லிம்கள் ஜிவகாருண்யம் பேணாதவர்கள் என்ற அவப் பெயரையும் பெற்று கொள்ளாது தவிர்ந்து நடந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

‘குல்லு ஆமின் வஅன்தும் பிகைர்’ எல்லா ஆண்டும் உடல் உள நலத்துடனும் மன மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகின்றேன்.

Published by

Leave a comment