Category: Your Kattankudy
-
அந்த முக்கிய புள்ளி யார்..? இவா்தானோ..?
கதுருவலை ஹூஸைன் அரசாங்கம் பொத்திப் பொத்திப் பாதுகாத்த துரும்பு ஒன்று வெளிப்பட்டுள்ளது. இது வரை காலமாக ஐ.தே.க அடைந்த பின்னடைவுகளுக்கு முக்கிய காரணமாக அதன் தலைவர் என்று பலராலும் பொதுவாக பேசப்பட்டது.
-
காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2015 புதிய மாணவர் அனுமதிக்கு நேர்முகப் பரீட்சை இம்மாதம் 14 திகதி
பழுலுல்லாஹ் பர்ஹான் காலி: இலங்கையில் தென் மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்கான மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவு, அல்குர்ஆன் மனனப் பிரிவு என்பவற்றின் முதலாம் ஆண்டிற்கு புதிதாக மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.
-
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஏழாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்தது
கொழும்பு: ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் வேட்பு மனுக்களை நிராகரிக்குமாறு முன்வைக்கப்பபட்ட இரண்டு ஆட்சேபணைகளை நிராகரிப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்ரிய திங்களன்று அறிவித்தார்.
-
ராஜபக்ச சகோதரர்களுக்கிடையில் முறுகல்நிலை!
கொழும்பு: ராஜபக்ச சகோதரர்களுக்கிடையில் முறுகல்நிலை தோன்றியிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மகிந்த, அமைச்சர் பசில் மற்றும் கோத்தபாய ஆகியோருடன் சபாநாயகர் சமல் ராஜபக்ச அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
வாய்பேச முடியாத மாணவர்களுக்காக வை.எம்.சீ.ஏ. யினால் நடாத்தப்படும் வாழ்வோசைப் பாடசாலையின் ஆரம்பம் தொடக்கம் இன்று வரையான வளர்ச்சிகள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மீனவள் இன்னிசை பாடும் மட்டுமாநகரினிலே வாய்மொழியையும் கேட்கும் வல்லமையையும் இழந்த மாணவ மணிகளுக்காக வை.எம்.சீ.ஏ.யின் அணுசரனையுடன் நடாத்தப்படுவதே இவ்வாழ்வோசைப் பாடசாலையாகும். இப்பாடசாலையானது 1999ம் ஆண்டு 3 ஆசிரியர்களுடனும் 11 மாணவர்களுடனும் தனது பணியை ஆரம்பித்தது. இப்பாடசாலையின் ஆரம்ப நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு வாடகைக் கட்டடத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது.
-
“தடுமாறுகின்ற தலைவர்களை, மக்கள் வழிநடத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது”: பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் காத்தான்குடி: “தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய தருணத்தில் சமூகத்தைச் சரியான பாதையில் வழிநடாத்த வேண்டியவர்கள் தலைவர்களே. ஆனால், அவ்வாறான தலைவர்கள் இன்றைய சூழலில் தடுமாறிக்கொண்டும் தயங்கிக்கொண்டும் இருக்கின்ற நிலையில் சமூகமே அவர்களை வழிநடாத்த வேண்டிய சூழ்நிலை தோன்றியிருக்கின்றது” என பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
-
இறுதி முடிவு தெரியாது தவிக்கும் இலங்கை அரசியல் அரங்கம்.
எப்-கே இலங்கை; தனது இரண்டாண்டு கால ஆட்சி இருந்த நிலையில் தனக்கிருக்கின்ற வாக்கு வங்கியின் மீதுள்ள நம்பிக்கையினால் மீண்டும் ஓர் ஜனாதிபதி தேர்தலை எதிர் கொண்டு வெற்றி வாகை சூடிக் கொள்ள நினைத்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் என்னத்தில்
-
அத்தனகல தொகுதியில் ரணதுங்கவை வேட்பாளராகக் களமிறக்கும் சந்திரிகா
கொழும்பு: மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்குள் இருந்து மைத்திரிபால சிறிசேனவை வெளியே கொண்டு வந்து, எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்திய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளார். நேற்று அத்தனகலவில் நடந்த கூட்டம் ஒன்றில், முன்னாள் துடுப்பாட்ட வீரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்கவை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதி அமைப்பாளராக நியமிப்பதாக சந்திரிகா அறிவித்துள்ளார்.
-
நாட்டை அழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை
– மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் கொழும்பு: அமெரிக்காவினதும், பிரான்ஸினதும் அரசியலமைபில் இரண்டிலுமுள்ள சாதகமான நிறைவேற்று அதிகாரங்களை உள்ளடக்கி உலகில் எங்குமே இல்லாத சர்வாதிகார ஜனாதிபதியை தோற்றுவிக்கும் அரசியலமைப்பை 1978 இல ஜே ஆர் ஜெயவர்த்தனா அறிமுகம் செய்தார். ஆனால் அந்த நாடுகளில் உள்ள செனட், லெஜிஸ்லேசர் மற்றும் ஏனைய பொது சேவைகள், இராணுவ,காவல் துறை, தேர்தல், நீதித்துறை, ஊடகம் என்பவற்றின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துகின்ற உத்தரவாதங்கள் இலங்கை அரசியலமைப்பில் உள்ளடக்கப்படவில்லை.
-
ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் 1000 புதிய சொற்கள் இணைப்பு
லண்டன்: உலகப்புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் மேலும் புதியதாக 1000 சொற்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 150 வருடங்கள் பழமை வாய்ந்த உலகப் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் அகராதி நிறுவனம் ஆங்கில மொழியில் 6 இலட்சம் வார்த்தைகளை வைத்துள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக அறிமுகமாகும் சொற்களை இணைத்துக் கொள்வது வழக்கம்.
-
வேட்பு மனுக்கள் இன்று ஏற்பு: வேட்பாளர்கள், கட்சிகளின் முழு விபரங்கள்…
கொழும்பு: ஜனவரி 08ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் இன்று ராஜகிரியவிலுள்ள தேர்தல் செயலகத்தில் கையேற்கப்படவுள்ளன.வேட்புமனுக்கள் கையேற்பு இன்று காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் செயலகம் பூர்த்தி செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
-
“முத்தலாக் முஸ்லிம் விவாகரத்து முறை ஒழிய புதிய சட்டம் தேவை”
சென்னை: முஸ்லிம் கணவன் ஒருவர் மூன்று முறை தலாக் என்று கூறியே மனைவியை விவாகரத்து செய்யக்கூடிய முத்தலாக் முறையை ஒழிக்க சட்டம் வர வேண்டும் என பாரதிய முஸ்லிம் மகளிர் இயக்கத்தின் வருடாந்த மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒற்றை சிவில் சட்டம் வருவதை தாங்கள் ஆதரிக்கவில்லை என்றாலும், இஸ்லாமிய விழுமியங்களுக்கு அமையவே முஸ்லிம் சமூகத்தில் மகளிர் நலனை பாதுகாக்க புதிதாக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என இந்த அமைப்பு வாதிடுகிறது.