அந்த முக்கிய புள்ளி யார்..? இவா்தானோ..?

images (3)கதுருவலை ஹூஸைன்

அரசாங்கம் பொத்திப் பொத்திப் பாதுகாத்த துரும்பு ஒன்று வெளிப்பட்டுள்ளது. இது வரை காலமாக ஐ.தே.க அடைந்த பின்னடைவுகளுக்கு முக்கிய காரணமாக அதன் தலைவர் என்று பலராலும் பொதுவாக பேசப்பட்டது.

மஹிந்த-ரணில் உடன்படிக்கை காரணமாக தேர்தல்களில் தோல்வி அடைவதாகவும், ஐ.தே.க இரகசியங்கள் அரசாங்கத்திற்கு ஐ.தே.க முக்கியப் புள்ளி ஒருவரினூடாக சென்றடைவது பற்றியும் செய்திகள் வெளிவந்தன.

எனினும் அந்த முக்கிய புள்ளி யார் என்பதை  இப்போது  அனுமானிக்கக் கூடியதாக உள்ளது. ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் என்பது மிகப் பொறுப்பு மிக்க பாத்திரத்தை வகிக்கக் கூடிய பதவியாகும். மிகவும் நம்பிக்கைக்கு உரிய நபர்களே இப்பதவிக்கு நியமிக்கப்படுவது இயல்பு.

கடந்த தேர்தல் முடிவுகளுடன் ஐ.தே.க வளர்ச்சி அடைந்திருந்தாலும், ஜனாதிபதி தேர்தலில் மிகவும் ரகசியமான நடவடிக்கைகளே தேர்தலில் வெல்லும் வாய்ப்பை அதிகரிக்கும் என்பதை ரணில் மிகவும் சூட்சமமான முறைகளால் நடைமுறைபடுத்தி இருந்தார் என்று  சொன்னால் மிகையாகாது.

இப்போதைய நிலையை பார்க்கும் போது திஸ்ஸ அத்தனயகே இற்கும் தெரியாதென்றே சொல்ல வேண்டும். தெரிந்திருக்கும் பட்சத்தில் அரசாங்கத்திற்கு இப் பொதுவேட்பாளர் சம்பந்தமான இரகசிய நடவடிக்கைகள் கசிவாகியிருக்கும்.

ஐ.தே.க பொறுத்தவரை ஏற்கனவே விலைபோன, அரசாங்க ஒற்றனாக செயற்பட்ட ஒருவரை அரசாங்கம் தன் பக்கம் (இன்னும் விசேட சலுகைகள் கொடுத்து) அரவணைத்துக் கொண்டுள்ளது என்பதனால் நன்மையே அன்றி இழப்பு என்று சொல்லுமளவுக்கு எதுவுமில்லை.

ஆனால்   அரசாங்கத்தை பொறுத்த வரை பொதுவேட்பாளர் யார் என்று தெரிந்ததும் செய்வதறியாது திகைத்தது. காரணம் செயல் திறன்மிக்க, எல்லோரினதும் நன்மதிப்பை பெற்ற தமது கட்சியின் வெற்றிக்கு மிக உறுதுணையாக இருந்த பொதுச்செயலாளர் பொதுவேட்பாளராக களமிறங்குவார் என அரசாங்க புலனாய்வுக்கோ, அரசாங்க ஒற்றர்களாக செயற்பட்ட ஐ.தே.க முக்கியப் புள்ளிக்கோ தெரியவில்லை. ஐ.தே.க இனை விட அரசாங்கத்திற்கே பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

திஸ்ஸ இனை விட மைத்ரிக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கு மிக அதிகமாகும். இதனை விட அண்மைய கால இவரது நடவடிக்கைகளும், பேச்சும் அனைவரது பார்வையை இவர் மீது ஈர்க்கிறது. அரசாங்கத்திற்கு இதனை தடுக்கவும், ஐ.தே.க அல்லது எதிர்க் கட்சியில் இருந்து எவரையாவது  தன் பக்கம் இழுக்க வேண்டிய அவசியத்தினால் தனக்கு ஒற்றன் வேலை பார்த்தவரையே கடைசித் தருவாயில் இழுக்க நேர்ந்துள்ளது.

Published by

Leave a comment