காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2015 புதிய மாணவர் அனுமதிக்கு நேர்முகப் பரீட்சை இம்மாதம் 14 திகதி

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

காலி: இலங்கையில் தென் மாகாணத்தில் அமையப்பெற்றுள்ள காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் 2015ம் ஆண்டு  ஜனவரி மாதம் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்கான மேற்படிக் கல்லூரியின் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவு, அல்குர்ஆன் மனனப் பிரிவு என்பவற்றின் முதலாம் ஆண்டிற்கு புதிதாக  மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர்.

இதற்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 14-12-2014 ஞாயிற்றுக் கிழமை மு.ப. 09.00 மணிக்கு இலக்கம் 50, ஹிரிம்புர குறுக்கு வீதி, காலி என்ற முகவரியில் அமைந்துள்ள இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக  காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேய்க் டப்ளியூ.தீனுல் ஹஸன் (பஹ்ஜி) தெரிவித்தார்.

குறித்த நேர்முகப் பரீட்சை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் விண்ணப்பதாரிகளில் அழைப்புக் கடிதம் கிடைத்தவர்கள்  அனைவரும் குறித்த நேரத்தில் சமுகமளிக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.

ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்களும் சரீஆ (மௌலவி ஆலிம்) பிரிவுக்கு 15 வயதிற்கிடைப்பட்ட தற்பொழுது பாடசாலையில் 8ஆம் ஆண்டில் கல்வி கற்கும் அல்குர்ஆனைச் சரளமாக ஓதத் தெரிந்தவர்களும், அல்குர்ஆன் மனனப் பிரிவுக்கு 11-13 வயதிற்கிடைப்பட்ட அல்குர்ஆனைச் சரளமாக ஓதத் தெரிந்தவர்கள் இந் நேர்முகப் பரீட்சையில் தகுந்த அத்தாட்சிகளுடன் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதாகவும் இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு  0912243672 ,    077 7921418 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும்.

Published by

Leave a comment